பக்கம்:பேசாத பேச்சு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாமற் சொன்ன துரை

பேசப் படித்த பெரியோர்கள் பேசாமல் இருக்கவும் படிக்கிரு.ர்கள் என்பது முரண்பாடாகத் தோற்றுகிறது. பேசாத மோனத்திலே அவர்கள் படிக்காத படிப்பெல்லாம் படிக்கிருர்கள். - -

பிரமபுத்திரர்களாகிய நான்கு முனிவர்கள் மெத்தப் படித்தவர்கள். சனகர், சனத்தனர், சாதனர், சனத்குமார் என்ற அந்த கான்கு பேர்களும் நாலு வேதங்களேயும் கரைகண்டவர்கள், ஆறு சாஸ்திாங்களேயும் முறையாகக் கற்றுக் கை வந்தவர்கள். தாங்களே ஆராய்த்து கற்ற கல்வியோடு பல பல முனிவர்களிடம் பல அரிய செய்திகளைக் கேட்டும் தெளிந்தவர்கள். அவர்களே வேதங்களுக்கு வியாக்கியானமும் சாஸ்திரங்களுக்குப் பொருளும் வருஷக் கணக்காகச் சொல்லும் போாற்றல் படைத்தவர்கள். பேச்சுலகத்தின் தலை எல்லையில் அவர்கள் நின்ருர்கள். பேசப் படித்தவர்களின் பேச்சைக் கேட்டு இன்புற்றம், தாமே பேசியும் வாழ்ந்தவர்கள்.

அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. சாஸ்திரங் களில் அவர்கள் பாாதது ஒன்றும் இல்லை. பேசுபவர்கள் பேசும் பேச்சில் அவர்கள் அறியாதது யாதும் இல்லை. அவர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டால் அதை பார் எப்படித் தீர்ப்பது?

நான்கு முனிவர்களும் யோசித்தார்கள். மைக்கு

இனிமேல் சந்தேகம் ர்ேக்க யார் இருக்கிறர்கள்? கைலாச் பதியாகிய பரமசிவனே நமக்கு அருள் செய்தாலன்றி ".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/17&oldid=610172" இலிருந்து மீள்விக்கப்பட்டது