பக்கம்:பேசாத பேச்சு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பேசாத பேச்சு

கண்ணன் கேட்கவே சினங்கொண்டு துரியோதனன் է_1ՅY} பல கூறி எசினன். அவற்றைக்கேட்டு கல்லோர் நடுங்கினர். அன்று இரவு துரியோதனன் முதலியோர் கூடி மறு நாள் கண்ணனே அரசவைக்கு வருவித்து வஞ்சகமாகக் கொல்ல வேண்டுமென்று தீர்மானித்தனர். அரசவையில் குழி பறித்து, அகில் மல்லர்களே வைத்து, அக் குழியை மறைத்து, அதன் மேல் ஆசனம் இட்டுக் கண்ணனே அங்கே - அமாச் செய்து கொல்வதாக யோசனை செய்தார்கள்.

அடுத்த நாள் துரியோதனனுடைய தூதுவர்கள் கண்ணபிாானே அணுகி மிகவும் பரிவுடன் தம் அரசன் அழைப்பதாகக் கூறவே, அப் பிரான் 9/TFಣು ಉL அடைங் தான். அவைேடு அரசர் பலரும் வரவே, அவரை உள்ளே . விடாமல் அவன மாத்திாம் விடச் செய்து முன்பே அமைத்திருந்த ஆசனத்தில் இருக்கும்படி துரியோதனன் வேண்டினன். சத்தின கசிதமான அந்த ஆசனத்தில் அமர்ந்தவுடனே நெறுநெறென மேலிட்ட கால்கள் ஒடியக் கண்ணன் நிலவறையில் விழுந்தான். அப்பொழுதே அரவக் கொடியோனது வஞ்சகத்தை நினைந்து சினம் மூண்டு விசுவரூபம் கொண்டான். வானே முடி முட்ட கின்ருன். வானவரும் பிறரும் அஞ்சி நடுநடுங்கினர். நில வறையிலே ஆயுதபாணிகளாக நின்றவர்கள் யாவரும் காலால் தேய்க்கப் பெற்று அழிந்தனர். அண்டகடாகம் முழுதும் சிலேயோடப் பேருருவங் கொண்ட பிரான், கண்ணில் நெருப்பெழச் சிரித்தனன். -

பலபல கைகளோடு அப் பேருருவம் படைத்த பெரு மான் விளங்கினன். உலகமெலாம் சூரியனுடைய ஒளி மாறி ஒரே மரகத சோபை பாவியது. அந்த விசுவ, ரூபத்தைத் தரிசித்து அண்டரும் மாதவரும் வேகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/57&oldid=610212" இலிருந்து மீள்விக்கப்பட்டது