பக்கம்:பேசாத பேச்சு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பேசாத பேச்சு

சொல்லி, அவன் மீட்டும் எழுந்தவுடன் வீமன் போர் செய்யத் தொடங்கினன். - ‘. . இருவரும் இணை வேறு யாரும் இன்றிப் போர் செய் யும்போது, வீமன் சிறிது இளைப்பான் என்று தோற்றியது. அங்கே அருகில் இப் போரைக் கவனித்துக்கொண்டிருந்த அர்ஜுனன் கண்ணபிரான நோக்கி, வீமன் தளர்கின் முன். இனி என்ன செய்வது?’ என்று பரிவுடன் கேட்க, அப்பா அர்ஜானு, இந்த இருவரில் வீமன் பலவான்; துரியோதனன் போர் முறையிலே வலியவன். இருவரும் ஆயிா நாள் மலைத்தனாாயினும் தோல்வியுற மாட்டார்கள். விமன் வெல்ல ஒரு வழி உண்டு. அதை நான் இயம்புதல் `தகாது” என்ருன். அர்ஜுனன் பின்னும் வேண்ட, 'வீமன் தன் கதையில்ை துரியோதனன் துடையில் அடித் தோல் அவன் உலைவான். இதை வாயால் வெளிப்படையாகச் சொல்லுதல் இங்கிதமே அல்ல; ஒர் உரை கூறில் வஞ்சகமாம்” என்று கூறினன். அதைக் கேட்ட அர்ஜ" பனன் என் செயலாம் என்று யோசித்துக் கண்ணன் உள் ளம் உணர்ந்து, குறிப்பினல் இதனே வீமனுக்கு உணர்த்த லானன். வீமன் தன்னைப் பார்க்கும்படியாக நின்று தன் கையைத் துடையின்மேல் தட்டிக் காட்டினன். அது போரை வியக்கும் குறிப்புப் போலத் தோற்றிலுைம், கண்ணன் கூறிய உண்மையைப் புலப்படுத்தும் பேசாத பேச்சாக உதவியது. - குறிப்பை வீமன் உணர்ந்துகொண்டான்.

ஞான பண்டிதன் வாயு குமாரனும் -

. c நாரணன்பணி யால்இக்ா யோன்மொழி மோன வண்குறி தான்உண ரா, எதிர்

மோதினன் கதை பூபதி ஊருவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/61&oldid=610216" இலிருந்து மீள்விக்கப்பட்டது