பக்கம்:பேசாத பேச்சு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த தந்திரம் - 53

- (வாயுகுமாரன் - வீமன். இளையோன் - அர்ச்சுனன். மோனவண்குறி - மெளனமான குறிப்பு. பூபதி - துரியோ தனன். ஊரு - துடை.)

ஒரு முறை துடையில் அடித்தபோது துரியோதனன் அவ்வடி படாதவாறு தப்பின்ை ; ஆயினும் மீண்டும் வீமன், துடையைக் கதாயுதத்தால் எறிந்து பிளக்கவே துரியோதனன் வலியிழந்தான்.

இங்கும் கண்ணன் குறிப்பினலே காரியத்தைச் சாதிக்கும் தந்திரத்தை மேற்கொள்ளச் செய்தான். - பேசுகின்ற பேச்சு எங்கே பயன்படவில்லையோ, எங்கே உசிதமற்றதென்று தெரிகிறதோ, அங்கே பேசாத பேச்சுத் துணை நிற்கின்றதென்பதை இந்த மூன்று நிகழ்ச்சி

களும் விளக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/62&oldid=610217" இலிருந்து மீள்விக்கப்பட்டது