பக்கம்:பேசாத பேச்சு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೨|| ಹಮೆ

வத்தவ நாட்டு மன்னகிைய உதயணன் பகைவ ருடைய சூழ்ச்சியால் சிறைப்பட்டான். அவங்கி நாட்டு அரசனுகிய பிரச்சோதனன். அவனைச் சிறையிலிட்டான். o உதயணனுக்கு உயிரினும் சிறந்தவர்களாக நான்கு நண்பர் இருந்தனர். அவர்களுள் மதியிலுைம் ஆற்ற லாலும் சிறந்தவன் யூகி என்பவன். அவன் தன் தோழ லும் மன்னனுமாகிய உதயணன் சிறைப்பட்டதை அறிந்து எவ்வாறேனும் அவனை விடுவிக்க எண்ணித் தந்திரம் பல புரியலானன். தன்னைச் சேர்ந்த பலரை வெவ்வேறு உருவத்தோடு அவந்தியின் ாாஜகானி நகரமாகிய உஜ்ஜயி னியில் இருக்கச் செய்து, தான் பேய் பிடித்தவனைப் போல நடித்துத் தெருக்களின் வழியே கிரிந்து வந்தான்.

ஒரு நாள் பட்டத்து யானைக்கு மதம் கொள்ளும்படி யான உணவை ஊட்டி, அதை மதம் பிடித்து உழலச் செய்தான் யூகி. அரசனுகிய பிரச்சோகனன் அதனே அடக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளைச் செய்தும் இய லாமல் அது நகரத்தை அழிக்கலாயிற்று. யானே விணக்கு அடங்கும் என்பதை உணர்ந்த பிரச்சோதனன், மதகளியை அடக்கும் விணைப் புலமை உதயணனிடம் இருப்பதைத் கெரிந்து, அவனே விடுவித்து, யானையை அடக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டான். அவ்வாறே உதயணன் தன் விணத் திறத்தால் யானையைப் பணிய வைத்தான். அது முதல் பிரச்சோகனன் உதயணன்பால் பெருமதிப்பு வைத்து அவனுக்கென்று தனி மாளிகை கிருமித்து உதவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/63&oldid=610218" இலிருந்து மீள்விக்கப்பட்டது