பக்கம்:பேசாத பேச்சு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - - பேசாத பேச்சு நாய் பல்லே இளிப்பதுபோல, கெக்கப்புக்கே என்று என்னவோ உளறினன்.” w -

- அவனிடமிருந்த வந்த விளக்கத்தைக் கேட்டபோது அவர்கள் ஆச்சரியந்தான கொண்டார்கள்? வயிறு வெடிக் கச் சிரித்துத் தீர்த்தார்கள்.

பேசாத பேச்சில் இது ஒரு சிலேடை.

இலக்கியத்திலும் இப்படி ஒரு வரலாறு உண்டு. மூடர்களைப் புகடி பண்ணிப் பாடும் ஒளவைப் பாட்டியைப் பற்றி எத்தனையோ கதைகள் தமிழ்நாட்டில் வழங்குகின் றன. அவைகளில் இந்தக் கதை ஒன்று. -

ஒர் ஊரில் இரண்டு புலவர்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் நினைத்தமாத்திரத்தில் கவி பாடுவார்கள். அவர்களில் ஒருவர் அடக்கமானவர். மற்ருெருவர் கர்வம்

B GYT GYT6Yi T.

ஒரு நாள் ஒளவைப்பாட்டி அந்த ஊருக்கு வந்தாள். அங்களச் சுற்றி ஜனங்கள் மொய்த்துக் கொண்டார்கள். தமிழ் படிப்பவர்களும் கூடினர்கள். முன்னே சொன்ன புலவர்களும் அவளைத் தரிசனம் செய்து கொண்டார்கள். மிடுக்குள்ள புலவர் அவளுக்குப் பக்கத்தில் எப்போதும் இருந்துகொண்டு தம்முடைய பிரபாவத்தையும் புலமையை யும் அவள் காது கடுக்கும்படி சொல்லிக்கொண்டே இருந்தார். மற்ருெரு புலவர் வயசில் இளைஞர், அவ் விளம் புலவர் பாட்டியினிடம் பயபக்தியாக நடந்து கொண்டார். அவள் ஏதாவ்த கேட்டால் விசயமாக விடை செர்ன்ஞ்ர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/77&oldid=610232" இலிருந்து மீள்விக்கப்பட்டது