பக்கம்:பேசாத பேச்சு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு பொருள் 69

பாட்டி மிகவும் கெட்டிக்காரி அல்லவா ? இந்த இரண்டு புலவர்களேயும் பார்த்தாள். மூத்தவர் தலைக்கிறுக் குப் பிடித்தவரென்பதையும், இளையவர் பணிவுடையவர் என்பதையும் உணர்ந்துகொண்டாள். செட்டைப் புலவரை மட்டத்தட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.

இருவரையும் அழைத்து, நான் வாயில்ை பேசாமல் என் உள்ளக் கருத்தைப் பேசாத பேச்சில்ை வெளியிடு கிறேன். நீங்கள் அதை உணர்ந்து அதன் பொருளேப் பாட்டாகச் சொல்லுங்கள் ” என்று சொல்விச் சைகை களால் புலப்படுத்தத் தொடங்கிள்ை.

முதலில் வலது கை விரல்களைச் சேர்த்து ঙ্গতে பக்க மாகச் சாய்த்துக் காட்டினுள்; பிறகு விரல்களே மடக்கிப் பிடித்துக் காட்டினுள்; பின்பு இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து விரல்களை விரித்துக் காண்பித்தாள். அப்பால் ஒற்றை விாலைக் காட்டிப் பின் ஐந்து விால் நுனிகளையும் சேர்த்துக் காட்டினுள். இந்தக் குறிப்புக்குப் பொருள் சொல்லுங்கள். பெரியவராகிய நீங்களே உங்கள் கவியை முதலில் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள். - பெரிய புலவர் யோசனை செய்தார். காதல் சம்பந்த மான காட்சி ஒன்று அவர் அகக்கண்ணில் தோற்றியது. பாட்டின் குறிப்புக்களில் ஒவ்வொன்றும் அந்தக் காட்சி யின் பகுதியாகவே பொருள்பட்டது. பாட்டி கையை முதலில் காட்டினுள். பெண்களின் கண்கள் கையகலம் இருப்பதாகச் சொல்வது புலவர், மரபு. பாட்டி ஒரு பெண்ணேப் பற்றிப் பேசாமற் பேசுகிருள் என்று எண்ணிய புலவர், அவள் கண் மிகப் பெரிது என்பதைச் சொல்வதாகப் பொருள் செய்துகொண்டார். 'இவ்வளவு கண்ணினுள்” என்ற குறிப்பாகவே அது புலவருக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/78&oldid=610233" இலிருந்து மீள்விக்கப்பட்டது