பக்கம்:பேசாத பேச்சு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு பொருள் 71

என்று சொல்வதாக இளம் புலவருக்குப் பட்டது. அவருக்குச் சிற்றிடையை நினைக்கும்படியாக இருந்த கைப்பிடி இவருக்கு, தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்' என்று உபதேசிப்பதாகப் புலப்பட்டது. இப்படியே, இரு கையையும் சேர்த்து விரித்த குறிப்பில், இவ்வளவு சோருவது போடுங்கள்” என்ற அர்த்தத்தையும், ஒற்றை விாவில் 'தெய்வம் ஒன்றே என்ற பொருளையும், ஐந்து விால் துணிகளேச் சேர்த்துக் காட்டின குறிப்பில், ஐம் புலன்களாலும் செய்யும் பாவங்கள் போய்விடும்” என்ப தையும் தெளிந்தார். எல்லாவற்றையும் சேர்த்துப் பாட்டாக அமைத்தார். :

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின் இவ்வளவே னும்அனத்தை இட்டுண்மின்-தெய்வம் ஒருவனே என்ன உணரவல் லிரேல் அருவினைகள் ஐந்தும் அறும்.

(ஐயம் - பிச்சை வல்லிரேல் - சாமர்த்தியம் உடைய வர்களாக இருந்தால். அருவினேகள் ஐந்தும் - ஐம்பொறி களாலும் உண்டாகும் ஐந்து பாவங்களும்.) - இளம் புலவர் பாடலைச் சொல்லி முடித்தாாோ இல்லையோ, நன்று! நன்று! இதுதான் நான் நினைத்தது” என்று ஒளவை மகிழ்ச்சியோடு கூறினுள்.

நெட்டைப் புலவர் உளங்கருகி முகங்கருகி நின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/80&oldid=610235" இலிருந்து மீள்விக்கப்பட்டது