பக்கம்:பேசாத பேச்சு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித அழைப்பு

விக்கிரமாதித்த அரசன் ஒரு சமயம் தன் மந்திரி யாகிய பட்டியுடன் காடாறு மாசம் சென்றபொழுது ஏதோ ஒர் ஊரில் தங்கினன். அங்கே உள்ள தடாகத்தில் நீர் அருந்தி விட்டு வெயிலுக்கு ஆற்ருமல் அருகிலுள்ள மாத்தின் நிழலில் இளேப்பாறத் தொடங்கினன். பட்டி அமர்ந்திருக்க, விக்கிரமாதித்தன் அவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

அப்பொழுது அந்தக் குளத்தில் ரோடும் பொருட்டு ஒரு பெண் பல்லக்கில் ஏறி வந்தாள். அவளுடன் புல தோழிமார் வந்தனர். யாரோ பெரிய செல்வருடைய மகளாக இருக்க வேண்டுமென்று எண்ணும்படியான நிலை யில் அவள் வந்து இறங்கினுள். குளத்தில் இறங்கி ர்ோடும்பொழுது கரையில் மாத்தடியில் இருந்த விக்கிா மாதித்தன், பட்டி என்னும் இருவரையும் கண்டாள். போழகனகிய விக்கிாமாதித்தனுடைய அங்க லாவண்யத் தில் அவள் கண்களும் கருத்தும் சிக்கிக் கொண்டன. அவனுடைய திருமேனி அழகு முழுவதையும் கண்களால் பருகினுள். - - - - . -

அவள் உள்ளத்தே விக்கிரமாகித்தன்பால் எழுந்த ஆசை தீயைப்போலப் பொங்கிக் குமுறியது. துணிவும் சாமர்த்தியமும் உடைய அந்த மங்கை விக்கிரமாதித்தன் தன்னைப் பார்க்கும்படியான இடத்தில் கின்ற அங்கிருக்க வாடாமல்லிகை மலரை எடுத்துத் தன் மார்பில் வை த்துக் கொண்டு, தன் காலின்மேல் போட்டாள். பிறகு மணலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/81&oldid=610236" இலிருந்து மீள்விக்கப்பட்டது