பக்கம்:பேசாத பேச்சு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பேசாத பேச்சு

உணர்த்தி, நீங்கள் என் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிருள்' என்ருன். .

'அவள் ஒன்றும் பேசவில்லையே ! #2SHIGö) #_i} யைப் போல அல்லவா இருந்தாள் ? மலாையும் மணலையும் மயிரையும் கொண்டு விஷமம் செய்தாளே, அது எதற்காக ??

"அதுதான் அவள் பேசாமல் பேசின. பேச்சு. உங்களுக்கு அழைப்பு அனுப்பினள். நீங்கள் ஏற்றுக் கொண்டு அவள் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்.”

"அவள் எங்கே இருக்கிருள்? அவளே எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று ஆவலுடன் அரசன் கேட்டான். "எல்லாவற்றையும் அவளே சொல்லியிருக்கிருள். அவள் பெயர் தன அமராவதி. அவள் ஊர் காலிங்கப் பட்டணம். அவள் தகப்பனர் பெயர் மயிர் மாணிக்கம் செட்டியார். அவள் வீட்டுக்கு எதிரில் ஒட்டு வில்லை போட்ட வீடு இருக்கிறது. அங்கே உங்களை வரும்படியாக அழைப்பு விடுத்திருக்கிருள்” என்ருன் பட்டி.

'இதென்ன அப்ப்ா, ஜோசியம் சொல்கிற மாதிரி அடுக்கிக்கொண்டு போகிருயே! உனக்கு அவளே முன்பே தெரியுமா ? உள்ளதைச் சொல்லிவிடு' என்று அரசன் கேட்டான். * t

"அவள் முதலில் மலரை எடுத்துத் தனத்தில் வைத்துக்கொண்டாள். அதனுல் தன அமராவதி என்ற தன் பெயரைத் தெரிவித்தாள். அந்த மலாைக் காலிலே போட்டுக்கொண்டதால் அவள் இருப்பது காலிங்கப் பட்டணம் என்பதை உணர்த்தினுள். மணலைக் குவித்து மேலே ஒட்டை வைத்தது, தன் வீட்டுக்கு எதிரில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/83&oldid=610238" இலிருந்து மீள்விக்கப்பட்டது