பக்கம்:பேசாத பேச்சு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித அழைப்பு 75

விடு ஒட்டு வில்லை விடென்று குறிக்கவும், மயிரைச் சுருட்டி வைத்தது தன் தந்தை மயிர்மாணிக்கம் செட்டி என்று புலப்படுத்தவும் ஆகும்” என்று அமைச்சன் அந்தப் பேரழகியின் பேசாத பேச்சுக்குப் பொருள் விரித்துரைத்தான்.

உடனே அவ்விருவரும் அந்தணர்களைப் போல வேஷம் புனைந்துகொண்டு காலிங்கப் பட்டணத்துக்குப் போனுர்கள். அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டு பிடித்துச் சென்று மயிர்மாணிக்கஞ் செட்டியாரைக் கண்டு. தாங்கள் யாத்திரிகர்கள்என்றுதெரிவித்துக்கொண்டார்கள். செட்டியார் அவர்களே உபசரித்து, இங்கே இருந்து விட்டுப் போங்கள். நீங்கள் விருந்து சமைத்து உண்ண அரிசி பருப்புக் தருகிறேன்” என்று சொல்லி ஏவலாளர் களிடம் அவ்வாறு கொடுக்கச் சொன்னர். ஏவலாளர்கள் விட்டுக்குள் சென்று செட்டியார் கருத்தைத் தெரி விக்கவே, அங்கிருந்த தன அமராவதி அரிசி பருப்பு முதலியவற்ருேடு இடையே ஒரு கரும்புத் துண்டத்தையும் வைத்து அனுப்பினுள். -

அவற்றைப் பெற்றுக்கொண்ட இருவரும் புறத்தே சென்று, வாங்கிவந்த பண்டங்களைப் பார்த்தபோது, கரும்புக் துண்டத்தையும் கண்டார்கள். ہوا تالا "அாசே, இந்தப் பெண்மணி மிகவும் சாமர்த்தியசாலி, நம்மை இன்னுரென்று தெரிந்துகொண்டு மற்ருெரு செய்தியை அனுப்பியிருக்கிருள். தன்னுடைய காரியத்தைச் சாகித் துக்கொள்ள் ஒரு தோழி உண்டென்பதைக் காட்டியிருக் கிருள். கரும்பினியாள் என்ற பெண் அவள் உயிர்த் தோழியாக இருப்பதை இந்தக் கரும்பு புலப்படுத்து கிறது. இனி அவளைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/84&oldid=610239" இலிருந்து மீள்விக்கப்பட்டது