பக்கம்:பேசாத பேச்சு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 -. பேசாத பேச்சு

என்று சொல்லி, அவ்வாறே அத்தோழியைக் கண்டு பிடித்தார்கள். பிறகு பல பல தந்திரங்கள் செய்து வணிகர் மகளாகிய அமராவதியை அணுகி இன்புற்று விக்கிரமாதித்தன் தன் ஊருக்கு அழைத்துச் சென்ருன்.

விக்கிரமாதித்தன் கதையில் இது ஒரு வரலாறு. காதல் கொண்ட மங்கையர் தம் கருத்தை இங்கிதத்தால் வெளிப்படுத்தும் முறையை இந்தக் கதை சொல்கிறது. பழம் பாடல்களில் இத்தகைய இங்கிதக் காட்சிகள் வருகின்றன. .

காதலனும் காதலியும் இன்னும் மணந்துகொள்ள வில்லை. பூம்புனத்திலே சந்தித்து இன்புறும் வழக்கத்தை உடையவர்களாக இருக்கிருர்கள். வழக்கம்போல ஒரு நாள் காதலன் காதலியைக் காண வந்தான். அன்று அவள் வீட்டிலிருந்து பலர் அவளுடன் வந்திருக்கிருர்கள். இனிமேல் அவள் அந்தப் புனத்துக்கு வாமாட்டாள். ஆகவே காதலன் அவளைப் பகற்காலத்திலே அங்கே வந்து கண்டு செல்லும் காரியம் இனி நடக்காது.

அவனே வந்துவிட்டான். யார் யாரோ அங்கே இருப்பதைக் கண்டு, அங்கே தற்செயலாக வந்தவனப் போல கிற்கிருன். அவள் மார்பு படபடக்கிறது. நாளைக்கு இங்கே வந்து ஏமாந்து போவாரே என்று எண்ணுகிருள். :இனிமேல் ராத்திரி காலத்தில் வந்தால் சந்திக்கலாம்' என்று அவனுக்குச் சொல்லவேண்டும். வாய் திறந்து சொல்லுவெ தன்பது நடக்கிற காரியமா?

அறிவுமிக்க அம் மங்கை சட்டென்று அருகே கிடந்த தாமரை மலரை எடுத்தாள். அது மலர்ந்து விரிங்

§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/85&oldid=610240" இலிருந்து மீள்விக்கப்பட்டது