பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நாணம் என்ன ?

நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?

காணக்காண இன்பம் நல்கும்
கலைவிழியின் மனமொழிகள்
பூணணிந்த புதுப்பெண்ணைப்போல்
பூவில் மறைந்த தேனினைப்போல்

நாணமென்னடி பெண்ணே
நாணமென்னடி?

முன்னும் பின்னும் தெரியாதா ?
உறவு முறையும் புரியாதா ?
அன்பு கொண்ட நெஞ்சினுக்குள்
அலைபவனும் நானல்லவா ?
 
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?

வானம்பாடிக் குருவியைப்போல்
வன்னக்குயில் தேனிசைபோல்
நானெழுதும் பாட்டிசைக்கும்
நல்லமுதே! பொன்மயிலே