பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கூந்தல் கோலம்


கூந்தல் அவிழ்ந்து குலுங்கையிலே நெஞ்சம் கூத்திட் டுவந்து களித்திடுதே !- கடல் ஏந்தும் அலைச்சுருள் வண்ணத்திலே குழல் இன்பக் குதிப்பினை ஊட்டிடுதே !- அடி நீந்தும் நிலாவொடு நீலமுகிற்குலம் நேர்பட்டதாய் முனம் தோன்றினையே - உனை மாந்த வருகென தாழ்ந்துவரவேற்கும் மாலுளம் போல் தவழ்ந்தாடிடுதே !

(கூந்தல்)

பின்னி முடியாத கூந்தலிலே உள்ளம் பின்னிக்கிடந்திசை பாடிடுதே !- அடி அன்புடையான் கண்ணில் அன்பின் இசைவெலாம் அன்புக்குகந்த அரும்பொருளோ ! புகழ் வண்ண மயில் தோகைவடமிட்டாடல் போல் வார் கூந்தலோ இன்னைக் காண்கையிலே - உடன் என்னை இழக்கிறேன் அன்பின் சிறகினால் இன்பவான் எல்லையில் நீந்துகிறேன்

(கூந்தல்)