பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1. உடலும் உலகமும்

மகிமை நிறைந்த மரியாதைக்குரிய பிறவி மானிடப் பிறவி, ஒராயிரம் காலம், பாரத்தவமிருந்து வாராது வந்த மாமணி என்று போற்றப்படுவது மானிடப் பிறவி.

மானிடப் பிறவியின் பெருமைக்கு மகுடமாய் விளங்குவது, மணி ஆரமாய்த் துலங்குவது மனித உடல்தான்.

மனித உடல் மாபெரும் பெருமை பெற்றது.

அழகு, ஆற்றல், அறிவு நுண்மை, நூதனம் எல்லாம் கொண்ட ஏற்றமிகு அமைப்புதான் மனித உடல்.

இந்த உடலை வைத்தே உலக வாழ்க்கை தொடங்குகிறது. உலகம் மனித உடலுக்கு மேடையாக விளங்குகிறது. மனிதனது ஆட்டமும் பாட்டும், கூத்தும் கும்மாளமும், ஆட்சியும், மீட்சியும், நடனமும், நளினமும் எல்லாம், உலக மேடையில்தான் அரங்கேற்றம் ஆகின்றன.

ஏன் இப்படி? உடல் அமைப்பும் இந்த உலக அமைப்பும் ஒத்துப் போவதால் தான். ஒத்த அமைப்பும் ஒத்த சிறப்பும் வாழ்க்கையின் மொத்தப்பயன்களையும் வாரி வழங்குகின்றன. நாளும் முழங்குகின்றன.

உலகம் என்பது இயற்கை, மனித செயல் என்பது செயற்கை.

இயல்+கை என்பது இயற்கை ஆகிறது. உலகத்தின் இயல்பான ஒழுங்காக, ஒரே நெறியில் ஒரே முறையில் இயங்கி வரக்கூடிய