பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.m = − = − = − = − = − = – - יי " יי- "יעיי # *-* TT = III *.* I * *Iقعیت====== r- СZa 515)|thu Ln6ööTL5uth (Skeletal System) 3,603 LD5%TL60th (Muscular System) @TÉ5 o' L 106&TL60th (Circulatory System) G6,175 LDSösL60th (Respiratory System) §76Mt LDSösLouth (Digestive System) [BJūL LD6&TL60th (Nervous System) &B||6|| Ln65us 60th (ExCretory System) IBT6Tufflá)6OTāsūlīlā6is unsisL60th (Endocrine System) Islipsium)|[L LDStarL60th (Reproductive System) இத்தகைய மண்டலங்கள் எல்லாம் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிக்கல்களை சேர்க்காமல் சீராக நடத்தி வருகிறபோது தான், உடல் செம்மாந்த தோற்றம் பெறுகிறது. செழுமையான ஏற்றம் பெறுகிறது. நோயில்லா பெருமை மிகு வாழ்வு வாழ்கிறது. இத்தகைய செயல்கள் எடுப்பாகவும் மிடுக்காகவும் நடைபெற தினம் உதவுவது மூச்சாகும். உலகம் முழுவதும் பரவி பரந்து திரிகின்ற காற்று, உடலுக்கு உள்ளேபோய், நிரவி நிரவி வருகிற போதுதான், உடலுக்குள் உயிர் இருக்கிறது. சிறக்கிறது. உயிரை வாழ்விக்க, உடலும் சோபிக்க உதவுகிற காற்றைத் தான் பிராண வாயு என்றனர். அந்த பதமான வாயுவைத்தான் உயிர்காற்று என்று பெருமிதம் பொங்கக் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க அருமையான காற்றை, அறிவோடு பயன்படுத்துகிற அற்புதமான வித்தைக்கு, வேள்விக்கு உரிய ஒரு புனிதப்பெயர் தான் பிராணாயாமம் என்பதாகும். சுவாசமாக உள்ளுக்குள் போய் வருகிற காற்றை, பக்குவமாகப் பயன்படுத்தி வாழ்கிற கலையைத்தான் பிராணாயாமம் என்றனர். பிராணனை காக்கிற பெருமையையும், பெருமை பெறுகிற உடலின் திறமையையும் வளர்க்கின்ற வல்லமை காற்றுக்கு உண்டு. அந்தக் காற்றை பிடிக்கும் கலையைத்தான் பிராணாயாமம் என்றனர்.