பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ι-ιι σι-ιι. οι οιυ. 1bouυ ι" ξa υιυ υυυυυυυur ( است۔ (4. பிராண வாயுவின் பெருமை) வெளி உலகுக்கும் மனித உடலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதில் பலருக்கும் பெருத்த சந்தேகம் இருக்கிறது. வெளி உலகம் என்றால் நிலம், நீர், நெருப்பு. காற்று, வானம் என்ற பஞ்ச பூதங்கள் என்கிற ஐம்பெரும் சக்திகளாகும். அதுபோல் தான் நமது உடலும். நமது உடல் மண்ணால் ஆகியது என்றும், இந்த மண்ணால் ஆன உடம்பில் வானமாகிய ஆன்மா வியாபித்திருக்கிறது என்றும் மற்றைய சக்திகளான காற்று, நெருப்பு, நீர் ஆகியவை மனித உடலுடன் நீக்கமற நிறைந்து கிடக்கிறது என்பதுதான் நெருங்கிய தொடர்பாகும். காற்று, நீர், நெருப்பு என்ற மூன்றும், நமது உடலில் சீராக இருக்கும்வரை எந்த நோயும் அணுகாது என்பார்கள். அவைகள் நமது உடலில் குறைந்து போனாலும் அல்லது அதிகமாகிப் போனாலும் உடல் தான் அவதிப்பட்டு அழிகிறது. இதையே தான் வள்ளுவர் மிக அழகாகப் பாடியுள்ளார். மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. வளி என்றால் காற்று என்பது நமக்குத் தெரியும். இந்த வளியே அதிகமாக வீசினால், அதை சூறாவளி என்று சொல்லவும் நமக்குத் தெரியும். வளியை காற்று என்பது போல, வாயு என்றும் வாய்வு என்றும் நமது முன்னோர்கள் அழைத்தனர். வாயு வாய்வு என்பது நமது