பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


++ டாகடா. எஸ். நவராஜ செலலையா நுரையீரலுக்குள் இப்போது நிறைய காற்று வருகிறது. நுரையீரல் நிறைகிறது. இவ்வாறு ஆழ்ந்த தன்மையில் மூச்சிழுப்பதால் காற்றின் கொள்ளளவு அதிகமாகிறது. நுரையீரல் காற்றை ஏற்றுக் கொள்ளும் அளவு எவ்வளவு என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்! நுரையீரல்கள் இரண்டு உள்ளன. அவற்றின் எடையானது 2.5 பவுண்டு உள்ளது. வலது நுரையீரல் பெரியதும், இடது நுரையீரல் சற்று சிறியதுமாக அமைந்திருக்கின்றன. இதயத்தின் பக்கத்திலிருப்பதால், இடதுபுற நுரையீரல் சற்றுச் சிறியதான தோற்றம் கொண்டிருக்கிறது. நுரையீரல்களின் உள்ளே காற்றுப் பைகள் (Air sacs) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த காற்றுப் பைகளை எல்லாம் நாம் பரப்பிவிட்டால் அதன் அகலப்பரப்பு எவ்வளவு தெரியுமா? 1000 சதுர அடிகள். என்பதாக கணக்கு. 300 முதல் 350 மில்லியன் காற்றுப்பைகள் இருக்கின்றன என்பதாக உடற்கூறு வல்லுநர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய பரப்பளவுள்ள காற்றுப் பைகளை வைத்துக்கொண்டு, மூஞ்சுறு மூச்சுவிடுவதுபோல, கோழிகள் மூச்சு விடுவது போல, சுவாசித்து கொண்டிருந்தால் உடல் என்ன ஆவது! உடல் முழுவதும் நிறைந்திருக்கும் காற்று பிராணவாயு ஆகும். பிராண வாயு உடலில் நிறைய இருக்கிறபோது தான் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. உடலில் வேலை செய்வதன் காரணமாக, அல்லது இயங்குவதன் காரணமாக, பிராணவாயு சக்தி தருவதற்காகக் கரைந்து எரிந்து போக அந்த இடங்களில் எல்லாம் கரிய மில வாயு வந்து சேர்ந்து விடுகிறது.