பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேண்டும் என்றால் வீடு என்பதாக, இளைஞருலகம் ઉuઈીઠું, கொள்கிறது.இப்படிச் சொன்னால் தான் ஏற்றுக்கொள்கிறது. உடலுக்கு உணவு என்பது ஒரளவு தான். உண்+அவுசு என்பது தான் உணவானது. அதாவது ஒழுங்காக உண் என்பது இதன் அர்த்தம். உடலுக்கு உடை என்பது உடு+ஐ என்பதில் சேர்ந்தது. ஐ என்றால் உயர்ந்த என்றும் உடு என்றால் உடுத்து என்றும் அர்த்தம். அதாவது ஒழுக்கமாக உடை உடுத்து என்றார்கள். அதைத்தான், உடுக்கை என்றும் கூறினர். உறையுள் என்பதை வீடு என்றனர். வீடு என்றால் சுகம் என்றும், சொர்க்கம் என்றும் பொருள் கூறினர். இவ்வாறு ஆசையாக உண்பது, ஆர்வமாக உடுத்துவது. ஆனந்தமாக தங்கியிருப்பது. இதெல்லாம் எப்போது கிடைக்கும்? உடல் நன்றாக இருந்தால் தான் நடக்கும். அதாவது உடலும் உயிரும் வலிமையாக வாழ்ந்தால் தானே முடியும்! அப்படி உடலை வாழவைப்பது, வாழ்விப்பது எப்போது நடக்கும்? சுவாசித்தால் தானே உயிர் வாழ முடியும். உடல் நடமாட முடியும். ஒருவர் ஆசையோடு, ஆர்வத்தோடு, தான் வசதி படைத்தவர் என்று கர்வத்தோடு, கம்பீரத்தோடு, பெருமையோடு பீற்றிக்கொண்டு நிறைய சாப்பிடலாம். வயிறு புடைக்கச் சாப்பிடலாம். அதன் விளைவு எப்படி இருக்கும்? வயிற்றுக்குச் சுமை. உறுப்புகளுக்கு வலி. உடலுக்கு கேடு. உயிருக்கு வேதனை. ஆனால், அதே நேரத்தில், அதிகமாக சுவாசித்தால் என்ன ஆகும்? வயிற்றை நிரப்புவதால் வேதனைதரும் என்றோம். அதிக அளவு சுவாசித்து, நுரையீரலை நிரப்பினால், என்ன ஆகும்?