பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


= இதைத்தான் திரை என்பார்கள். ஆமாம் இளமைத் தோற்றத்திற்கு திரை விழுந்து விடுகிறது. முதுமை முன்னே வந்து முகம் காட்டிச் சிரிக்கிறது. அழகையும் நெறிக்கிறது. தோற்றத்தின் கட்டுக்கோப்பையும் முறிக்கிறது. நரை என்றால், மைபோல இருந்த மயிர் எல்லாம், கருமையை இழந்து வெண்மையாகி விடுகிறது. இதை இளந்ரை என்கிறார்கள். செல்ல நரை என்பார்கள். செல்வ நரை என்பார்கள். லெமனின் என்ற சுரப்பு நீர் குறைந்து போவதால் நரை வந்து விடுகிறது என்று விஞ்ஞானிகள் விளக்குவர். ஆனால் நரை என்பது தலைப்பகுதிக்கு மட்டும் அமைந்து விடுவதில்லை. வயதாக தலைமுடி மட்டும் நரைப்பதில்லை. நமது உடம்பிலே, தோல் பகுதியிலே நிறைய மயிர்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதன் எண்ணிக்கை இவ்வளவு என்று கணக்கிட்டுக் ட்டியிருக்கிறார்கள். அறிவியல் வல்லுநர்கள். தேகத் தோலில் இருக்குப் மயிர்கள் பல வகையாக தோலுக்கு உதவி செய்து கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட முடிகள், ஆற்றல் இழந்து போய் தமது கருமையிலிருந்து வெண்மையாகப் போய் விடுகின்றன என்றால் அது முதுமையின் போதுதான். அப்படிப்பட்ட முதுமை ஏற்படும் காலத்திலும், முடிகள் நரைக்காது. ஏனென்றால், நாம் முன் கூட்டியே ஒரு திருமந்திரப் பாடலை படித்துத் தெரிந்து வைத்திருக்கிறோமே. பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம். இந்த வரியானது, முதுமை ஆனாலும் கூட தேகம் பஞ்சாக, இளமையாக விளங்குகிறது பிராணாயாமப் பயிற்சியால் என்று விளக்குகிறது. இளமையான தேகமாக மாறிவிடுகிற போது, எப்படி நரை ஏற்படும்? நரையும் வராது திரையும் தோன்றாது. ஆகவே இளமைக் காலமும் வளமைக் கோலமும் பயிற்சியாளர்களுக்குக் கிடைக்கும்

  1. # # # ெ Inn 11 n u im I u a-xrr rr evrr ΙΤι ΙΔΙ ΤΙ ΣΥ Υ ΣΤι Ι ΠΓ