பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதோ, இந்தியத் துணைக்கண்டத்தின் ‘பாராளு மன்றம்’ நிறைவேற்றிய மசோதா—அதனைச் ‘சட்டம்’ என்ற உயர்நிலை பெறச்செய்வதற்கு, அவருடைய கையொப்பம் தேவை - பாபுவின் கரம், அதற்காக, எழுதுகோலை எடுக்கிறது!

அவர் பரோடா மன்னர்—இவர் ஜெயப்பூர் வேந்தர்—இதோ பம்பாய் கவர்னர்—இவர், படைத்தலைவர்—இவர்கள், பாபுவின் காத்தைக் குலுக்கி, மதிப்பும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!

அந்தக் கரம்—உலகப் போரசுகள், சிற்றரசுகள், உள்நாட்டு அரசாளும் வாய்ப்புப் பெற்றோர், ஆகியோரின் கரங்களைக் குலுக்கிய கரம்—முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வுக்கு, வழிகாட்டவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும் பெற்ற கரம், சாஞ்சித் திருநாள் நடைபெற்ற நாட்டிலே, காசி க்ஷேத்திரத்திலே, இருநூறு பிராமணர்களின் பாதத்தைக் கழுவிற்று! தெரிகிறதா காட்சி? இரு நூறு ‘பிராமணர்கள்’—வெள்ளியாலான மணைகள் மீது உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் — முப்பதுகோடி மக்களின் முடிசூடா மன்னர், வருகிறார், பூதேவர்களைத் தரிசிக்கிறார், வெறிபிடித்தலைந்த வெள்ளை ஏகாதிபத்யத்துக்குத் தலை சாய்ந்தறியாத வீரர், வெள்ளிமணைகள் மீது அமர்ந்திருக்கும் வேதியர் முன்பு சிரம் தாழ்த்துகிறார் — அம்மட்டோ— ஆட்சிபுரியும் கரத்தால், உலக ஆட்சி மன்றத்தின் உறுப்பினர்களை, ‘கௌரவப்படுத்திய’ கரத்தால், இருநூறு முப்புரியினரின் பாதங்களைக் கழுவினார்!! இந்தப் பெருமையைத் தனக்குத் தந்த பூசுரர்களுக்கு, தலா பதினோரு ரூபாய் தட்சணையும் தந்தாராம்! எப்போது? உரிமை வேட்கையும் சமத்-