பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

துவ வேட்கையும், குக்கிராமங்களிலேயும் காணப்படும், நமது நாட்களில்! நாடாளும் நல்லவர்; காலைக் கழுவினார்—அவர்கள் பிராமணர்கள் என்பதால்! அதைச் செய்யவேண்டிய காரியமென்று எண்ணி, அவருக்கு இருக்கும் எவ்வளவோ அலுவல்களுக்கு இடையிலே, அவரைப் பேட்டி காண, பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமைக்கு இடையிலே, இருநூறு திருப்பாதங்களை, பக்தி சிரத்தையோடு கழுவினார்—அந்தப் புண்யத்தைத் தனக்கு அளித்ததற்காக. தட்சணையும் தந்தார்! தெரிகிறதா, காட்சி! ஊர்பேர் அறியாத, பார்ப்பனர்கள், வெள்ளி மணைமீது — உலக வரலாற்றிலே இடம்பெற்ற பாபுராஜேந்திரர், அவர்களுடைய காலைக் கழுவுகிறார்! திரள் திரளாக மக்கள், நாட்டு விடுதலைப்போர் நடாத்திய நல்லவரைக் காண!! அவரோ, பாபத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்யத்தைப் பெறவும், பகவானுடைய அனுக்கிரகத்தைப் பெறவும், பார்ப்பனருடைய காலைக் கழுவிக்கொண்டிருக்கிறார்! ஜே! ஜே! ஜே!! என்று மக்கள் வெளியே முழக்கமிடுகிறார்கள், மகிழ்ச்சியுடன்! ஸ்வாமி! ஸ்வாமி! என்று பாபு, பக்திப் பரவசத்துடன், கூறுகிறார், ஒன்று, இரண்டு, மூன்று என்று உயர்தர அதிகாரிகள், ‘இருநூறு’ வரை கணக்கெடுக்கிறார்கள்! ராஷ்டிரபதி பவனிலிருந்து, இங்கே அவர் வந்தார், அவருடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டு காசிமகாராஜா அரண்மனையில் காத்துக்கொண்டிருக்கிறார், இருநூறு முப்புரியினர்—ஆற்றோரத்திலே இருந்துவந்தார்கள், குளக்கரைக்குத்தான் மீண்டும் செல்வார்கள்—அவர்களுடைய ‘பாதங்களை’ இவர் கழுவுகிறார்! பீரங்கி இருந்தால் என்ன, துப்பாக்கி இருந்தால் என்ன, துரைமகன் என்ற விருது இருந்தால் என்ன என்று வீராவேசமாகக் கேட்டவர்தான்