பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அவன் வேத நிந்தகன், நாஸ்திகன், என்று தூற்றிப் பார்த்தனர்; அதிலும் பலன் இல்லை! அருளொழுகும் கண்களுடன் புத்தர், இந்த அவனியையே தன் அரசுக்குக் கொண்டு வந்து விடுவார்போல் தெரிந்தது—அஞ்சினர்.

எதிர்த்தொழிக்க முடியாததை, அடுத்துக் கெடுத்து விடலாமல்லவா! அச்சம் கொண்ட ஆரியத் தலைவர்களின் மனதிலே இந்த எண்ணம் உதித்தது, புதிய நம்பிக்கை கொண்டனர். புத்தரைப் புகழ்ந்து பாராட்டுவதை அவர் உரை கேட்டு விழாக்கள் நடத்துவதை, தடுக்கவில்லை; தாராளமாக இவை நடைபெறட்டும், அவர் ஓர் அருளாளர்; அவருடைய அன்பு மார்க்கம், ஆதிமகரிஷிகள் அறியாததல்ல; உபநிஷத உண்மைகளையேதான், புதிய முறையில், அந்த உத்தமர் எடுத்துரைக்கிறார்—என்று பேசலாயினர்

இந்தப் போக்கு, சிக்கலைக் கண்டு சிந்தை நொந்து கிடந்த மன்னர்களுக்கு, மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.

பழைய மார்க்கத்தையும் கைவிடாமல், புதிய மார்க்கத்தையும் இகழாமல், எம்மதமும் சம்மதமே என்ற போக்கைக் கொண்டனர். புத்தரின் பொன்மொழிகளையும் போற்றினர், முனிபுங்கவர்களின் முதுமொழிகளையும் போற்றினர். ஆலயங்களும் அமைத்தனர், ஆதி தெய்வங்களுக்கு; புத்த மடங்களும் கட்டித் தந்தனர், புதிய மார்க்கத்தினருக்கு. மன்னர் உதவி புரியக் கண்டு; ஆரிய குருமார்களும் மகிழ்ந்தனர். தங்கள் ஆதிக்கத்தை ஓரளவு அசைத்திடும் ஆற்றல் கொண்ட புதுப்புயலை, எதிர்ப்பதைவிட, சற்றுப் பொறுத்துக் கொண்டிருந்துவிட்டு, அதன் வேகம் தணிந்த பிறகு, மீண்டும் ஆதிக்கவேட்டை ஆடலாம் என்று திட்டமிட்ட-