பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i21 மென்மையாக எழுந்த் சத்தத்தைக் கேட்டதும், ஞான சேகர் சிந்தனையினின்றும் விடுதலை அடைந்து, ஈவினிங் பேப்பரா, மஞ்சு?’ என்று கேட்டான், "ஊம் கொட்டினுள் மளுசுளி, போர்க்கலாழ ஒே 發籍 9° ஞானசேகரன் செய்திகளே மேலோட்டமாகப் பார்வையிட லாளுன் மஞ்சுளாவுக்குக் கால்கள் தரையில் பாவ மறுத்தன. அத் தானின் பார்வையிலிருந்து அச் செய்தி தப்ப முடியாது ! அம்மாவுக்கும் இனி செய்தி தெரிந்துவிடும்! தெரியட்டும், தெரி பட்டும் வேப்பேரி காவல் நிலையத்தின் வெளிவாசலில் ஞான சேகரன் தன்னிடம் கூறிய விஷயங்களை ஒன்றுவிடாமல் நினைவு கூர்ந்தாள். மஞ்சு ! உன் முடிவு நல்லதனமாக அமைந்துவிட்டால், உன் தாய் தந்தையரை ராசியாக்கி, நம் கல்யாணத்தை அவர்கன் முன் நின்று நடத்தச் செய்வது என் பொறுப்பு என் சாகசங்களால் வென்ற திருவேன் நான்! அத்தான் ஞானசேகர் தன் கடிதத்தின் இறுதியில் குறித்திருந்த செய்தி அவளுக்குப் புதிர்போடத் தொடங்கிவிட்டது. காவல் நிலையத்தில் ஞானசேகர் பேசும்போது அபாய அறிவிப்பைக் காட்டியும் அபயக் கரம் நீட்டியும் கொடிகாட்டிக் குறிப்பிட்ட விவரங்களையும் அவள் மனம் அசை போட்டது. அத்தானுக்கு மஞ்சுவாக இருந்த நான், காவல் நிலையத்தில் மஞ்சுளாவாக மாறினேன்; இப்போது இங்கே மறுபடி மஞ்சுவாக ஆகிவிட் டேனே ?-அவளுடைய மதுர இகழ்கள் சிரிப்பைக் கண்டன. தமிழரசியின் காதலுக்குக் குறுக்கே தான் நிற்பதில்லை என்று அவளிடம் உத்தாரம் கொடுத்த அந்த இன்பச் செய்தியை அவள் இந்நேரம் மிஸ்டர் ஞானசேகரிடம் அஞ்சல் செய்திருக் கவே வேண்டும் 1 ஆமாம்! :