பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தான் இப்போது சார்ஜ வீட் பதிவாகியிருக்குதுங்க. நீங்க ளும் உங்க கணவரும் ராசி ஆகி, மன இணக்கம் கொண்டால் அதன் விளைவாக ஏதாவது ஒரு சந்து கிடைச்சு, அதன் வழி யாக உங்க புருஷனக் காப்பாற்ற ஏதாவது ஒரு சந்து ஏற்படு. மான்னு பார்க்க முடியும். அப்பாவோட தனித்த அபிப்பிராய மும் இதுதான். இது ஒரு முயற்சி ! - அவ்வளவேதான்: மற்றப்படி, இதிலே அமைதிப்படவும் நம்பிக்கை வைக்கவும் வழி இருக்கிறதாகத் தெரியவில்லை 1. ஞானசேகரன் பெருமூச்சை நெட்டித் தள்ளி விட்டு மறுபடி தொடரலாளுன் : 'அத்தை! ஒரு உண்மையின் அடிப்படை நிலையை நீங்க புரிந்து கொள்ள வேண்டும். இந்தியன் பீனல் கோட் ஐந்: நூற்றுப் பதினென்ருவது செக்ஷன் பூதமாகக் காத்துக்கிணு இருக்கிறது என்கிற உண்மையை, ரகசியத்தை நீங்க மறந்து விடவே கூடாதுங்க மறந்தால், அது நியாயம் இல்ல ; தர்ம மும் ஆகமாட்டாது! சட்டத்தை இருட்டறை அப்படின்னும் சொல்லுவாங்க. இதை நாம் நம்புவதற்கில்லே. சட்டம் என் கிறது ஒரு ஒளி அரங்கம், அறையிலே செய்யப்படுகிற தவறு. கள் அம்பலத்துக்கு வந்து சேர்வதெல்லாம் இந்த ஒளி மேடை யில் தானுங்களே ? இந்த மேடையிலே அம்பலமாகியும் அம் பலப்படுத்தப்படும் இருக்கிற கேஸ்கள் எத்தனை எத்தனையோ ! ஆகவே, அத்தனை பலமுள்ள- நிர்த்தாட்சண்யமுள்ள சட் டத்தை உடைக்க முடியுமான்னு நாம் இருட்டிலே நின்று முயன்று பார்த்தாக வேணும். பிடிப்பில்லாத - நம்பிக்கை யில்லாத ஒரு முயற்சிக்கு உங்களுடைய மனிதாபிமனமுள்ள - நல்லெண்ண்ம்மிக்க ஒத்துழைப்பும்தான் கைகொடுக்கவேனும் குடும்பம் என்றல், நாலும்தான் இருக்கும். மன்னிக்கிறதும் மன்னிக்கப்படுற்தும் கூட தார்மீக அடிப்படையின் குடும்ப விவகாரங்களிலே சர்வ சகஜமாக இடம்பெறுகிற-இடம்பெற வேண்டிய நடவடிக்கைதான். நடந்துக்கிட்டிருக்கிற இந்தப் பாரத்-பாகிஸ்தான் சண்டையிலேதான் பதட்ட தில்