பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్తి யத்தில் சட்டமும் விதியும் கை கொடுக்க வேணும்!-அந்தச் சிந்தனையின் இனிப்பான நினைவுகளுக்குப பின் புறத்தில் பிச்சு வா’ வின் பயங்கர நிழல் படர்ந்து மறைந்த ரகசியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க அவளுக்கு நேரம் இல்லை போலும் நோன்பு மேற்கொண்ட ஒர் உள்ளத் தெளிவுடனும், தென்புடனும் தாயைத் தொடர்ந்தாள் மஞ்சுளா, அவளது கண்பார்வையும் உள் ரேழி மூலயிலே கிடந்த ஒரு நிழற் படம் தட்டுப்பட்டது : பார்த்த சடுதியில், மஞ்சுளாவின் ஈரல் குலே நடுங்கி விட்டது. - அது, சுந்தரேசன்.மீனுட்சி தம்பதியின் திருமணப்படம்! அந்தப்படம் இப்பொழுது சுக்கல் நூருக உடைந்து போய்க் காட்சி தந்தது : 11. கடலும் கப்பலும்! அம்மம்மா! - என்னதான் ஆலுைம் இத்தனே அவசரம் கூடாது அம்மாவுக்கு: தான் சினிமாவில் நடிக்கப் போகும் செய்தியை ஒரு சம்பிர. தாயத்தை அனுசரித்துக்கூட அம்மா-தன்னைப் பெற்ற தாய் தன்னிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் இருந்த நில வரத்தை எண்ணிக் குமைந்திாள் மஞ்சுளா, உட்காரம்மா, மஞ்சு. எதைப் பொறுத்தாலும் பொறுத் துக்கலாம். ஆனல் பசியை மட்டிலும் பொறுக்கக்கூடாது. ஏன்ன, கல்யாணத்துக்கு நிற்கிற பெண்ணுச்சேந்: என்று கூறி, ஆவி பறந்த சோற்றை இரண்டு எவர்சில்வர் தட்டுக் களிலே கொட்டினுள் மஞ்சுளாவின் அன்னை மீனுட்சி.