பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ இவ்வாறு விசாரிப்பதை மஞ்சுளா ஒருவேளை நாகரீகக் குறை வாகக் கருதிவிடுவாளோ என்ற தவிப்பில் மறுகிய அவன், அவ ளுடைய முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டது. அவள், அவனே- அவனுடைய கண்களைச் சந்தித்தவேளே யிலே, அவனும், அவளே-அவளுடைய விழிகளைச் சந்திக்க நேர்ந்தது!. சற்றே இமைகளைச் சுருக்கிக் கொண்டே அவள் என்னவோ கூற வாயெடுத்தாள். அத்ற்குள் அவன் இடைமறித்தான். காரண காரீயம் இல்லாமல் நீங்க இம்மாதிரியான இடங்களிலே அளுவசியமாக நிற்கமாட்டிங்க என்கிறதையும், இதுபோன்ற விஷயங்களிலே நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்-கண்டிப்பு என்பதையும் அறிந்தவன் என்கிறதாலேதான், ஒரு சுவாதீனத்தோடு உங்களைக் கேட்கத் துணிஞ்சேன், மஞ்சுளா " என்று விளக்கம் தந்தான் மாசிலா ហ្លរ៉ាំ, கதிர் முத்தம் பட்டு, ரோஜாப்பூ இதழ் இதழாக மடல் விழும் அல்லவா? அந்தப் பாங்கில் மஞ்சுளாவின் முறுவல் அமைந்தது. மிஸ்டர் மாசிலாமணி, ஒரு வேடிக்கை பார்த் தீங்களா?... நாம் இருவரும் இன்னமும் ஒருத்தருக்கொருத்தர் அந்நியம் என்கிற நினைப்பை நாம் இரண்டு பேரும் அறிந்தோ, அறியாமலோ, மனசுக்குள்னே கொண்டிருக்கிற காரண த்தின லேயே தான் நாம் பரஸ்பரம் விளக்கங்களைப் பரிமாறிக் கொள்கி ருேமோ என்று எனக்குத் தோணுது. நாம் இருவரும் ஒருத்த குக்கு ஒருத்தர் இனிமேல் அந்தியம் இல்லே என்கிற உண்மை யை நான் உணர்கிறேன்; அதுபோல நீங்களும் உண்ர்விங்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்ருள் அவள். உணர்வுகளின் ஆட்சி மேலோங்கியது. செவ்வித்ரங்கள் துடித்தன. அன்பின் பான்மை விழிகளிலும் பேசியது.