பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 மண் தெரியாமல் கோபம் பீறிட்டு வெடித்துத் தோல்த்தது. கீரையைக் கொத்தாக அள்ளி மனைவியின் கண்களைக் குறி வைத்து வீசினர் அவர், வைத்த குறி தப்பவில்லை, மீட்ைசி வேதனை தாளாமல் துடித்தவண்ணம், கண்கண்ப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டாள். " ஊர் உலகத்தைப்போல கவலைப்பட்டுக் கரிசனம் கொண்டு, பெற்ற பெண்ணைக் கரையேற்றிட வேணுமே என்கிற துப்பு இல்லாத புத்திகெட்ட உங்க மூஞ்சியிலே முழிக்க வேண்டிய துர்பாக்கி யத்தை இனியும் எனக்கு வைக்காமல், காளிகாம்பிகை தெய்வம் இந்த மட்டோடு என்னுேட கண் ரெண்டையும் பொட்ட்ை ஆக்கிட்டுதின்ன, எனக்கு நல்ல காலம்தான்! என் பெண்ணே என் கனவுப்படி கட்டிக் கொடுத்துப்பிடுவேன்!” என்று ஒரு பாட்டம் கத்தித் தீர்த்தாள். மனைவியின் அழகான கண்களிலே பொன்குங்கண்ணிக் கீரைக் கறியை வீசிய நிர்த்ாட்சண்யம் பற்றிச் சுந்தரேசன் லட்சி யம் செய்யவில்லை. ஆளுல் மனைவியின் ஏச்சும் பேச்சும் மட்டும் அவர் நெஞ்கில் உறைத்துவிட்ட்து. புருஷன் பேச்சைமதிச்சு நடக்கத் தெரியாத வீம்புக்காரக் கழுதையோட கண் ரெண்டும் கெட்டால்கூட நல்லதுதான். பெண் ஜன்மம் எடுத்த உனக்கே இவ்வளவு தைரியம் இருந்தால், ஆண்பிள்ளேயான எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என் பெண்ண்ே அதோ, கனவுப் படி கலியாணம் செய்து கொடுத்துப்பிட எனக்கும் வழி தெரியு மாக்கும்!...” என்று காரச்ாரமாகக் கனத்துக் கொண்டே சொற்களை வாரி வீசினர். . . கண்களைக் கழுவிக் கொண்டு இரண்டாம் கட்டுக்கு மீளுட்சி வருவதற்கும். மஞ்சுளா வேல முடிந்து பகற்சாப்பாட் டுக்கு வீட்டுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. சுந்தரேசன் சுதாரித்துக் கொண்டார். சரி. சரி, மஞ்சு வுக்கும் எனக்கும் சோறு போடு என்ருர், - - - -