இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்ன சொல்லுவேன்! ஒரு போலிஸ் உத்தியோகஸ்தன் என் எஜமானரோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்போது நான் பட்டபாடு தெய்வத்துக்குத் தான் தெரியும். நான் உடனே ஒரே ஒட்டமாக அவ்வீட்டை விட்டு வெளியே ஓடினேன். பிறகு அருகே இருந்த ஒரு புத அலுக்குள் போய் ஒளிந்துகொண் டேன். பிள்ளைகளே, நான் அந்தப் புதலுக்குள் நெடுநேரம் ஒளிந்துகொண்டிருந்தேன். அப்போது, நான் என்னென்ன எண்ணினேன் என்பதை இப்போது என்னுல் சொல்ல முடியாது.
‘ஆ தெய்வமே! என்னை இப்படியும் ஆசை காட்டி மோசம் செய்யலாமா ? நீ எனக்கு ஏன் இந்தப் பாழும் பொன் நாணயத்தைக் கொடுத்தாய் P
24