இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'ஆம்; போக்கடித்து விட்டேன்.'
'அப்படியா! எனக்கு ஒன்றும் தெரியாதே! என்ன போக்கடித்து விட்டீர்?'
'ஓ! இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நான் எண்ணினேன். ஒரு முழுப் பொன் சவரன் காணாமற் போய்விட்டது,' என்று வருத்தத்தோடு கூறினார் அக் கணக்கப்பிள்ளை.
இதைக் கேட்டதும் என் மனம் திடுக்கிட்டது; முகமும் மாறிவிட்டது. நான் வீடு பெருக்குவதை விட்டுக் கையில் துடைப்பத்தோடு நின்று கணக்கப்பிள்ளை சொல்லுவதைக் கருத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது என் எசமானர் மிக்க ஆச்சரியத்துடன், 'ஒரு சவரனா போய்
36