பக்கம்:பொன் விலங்கு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பொன் விலங்கு

இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான்: -

'உங்கள் வீடு எங்கே இருக்கிறது?" 'சங்கீத விநாயகர் கோவில் தெரு என்று வடக்கு மாசி வீதியிலிருந்து இந்தக் கோவிலுக்கு வருகிற வழியில் ஒரு சிறிய சந்து இருக்கிறதே தெரியுமா?"இந்த வினாவுக்கு சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் இல்லாமற் போகவே அவளே மீண்டும் பேசலானாள்.

'வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை சந்துக்கு மேற்குப் பக்கமாக மறுபுறம், தானப்ப முதலித் தெருவில் போய் முடிகிற மாதிரி ஒரு தெரு இருக்கிறதே. ஞாபகமில்லையா உங்களுக்கு?..."

"ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள் சொல்கிற தெருவா என்பதுதான் நினைவில்லை! நான் உங்கள் வீட்டையோ, தெருவையோ விசாரித்து வைத்துக் கொண்டும் பயனில்லை. காரணம், இன்றுவரை நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற நளின கலைகளைச் சிறிதும் இரசிக்கத் தெரியாமல் வாழ்க்கையின் கஷ்டங்களையே இரசித்து வளர்ந்துவிட்ட ஒருவனிடம் வந்து நீங்கள் உங்களுடைய ஆண்டாள் நாட்டியத்தைப் பார்க்க வரும்படி கூப்பிடுகிறீர்கள்." - -

"கூப்பிடவில்லை, கட்டாயமாக அழைக்கிறேன். அதை நீங்கள்தான் பார்க்க வேண்டுமென்று என் அந்தரங்கம் ஆசைப் படுகிறது."

'உலகத்திலேயே மிகவும் ஏழையான ஒருவனை நீங்கள் சிரமப்பட்டு அழைக்கிறீர்கள்..." -

"அதுதான் சொன்னேனே, ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை. நீங்களே ஏழையானால் உங்களால் காப்பாற்றப்பட்ட நான் உங்களைவிடப் பெரிய ஏழை." - -

அவள் இவ்வாறு கூறிக்கொண்டே கண்களில் நீர் நெகிழச் சத்தியமூர்த்தியை ஏறிட்டுப் பார்த்தாள். சத்தியமூர்த்திக்கு அந்தப் பேதையின் இதயம் ஒருவாறு புரிந்தது. அன்று இரவு அவன் கோவிலிலிருந்து வீடு திரும்பிய போது இரவு நெடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/158&oldid=595119" இலிருந்து மீள்விக்கப்பட்டது