பக்கம்:பொன் விலங்கு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 157

நேரமாயிருந்தது. பிள்ளை சாப்பிடாமலும் சொல்லிக் கொள்ளாமலும் போய் விட்டதனால் அம்மா வீட்டு வாசலிலேயே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சொல்லிக் கொள்ளாமலும் சாப்பிடாமலும் வெளியே போனதற்காக அம்மா அவனிடம் ஏதேதோ சொல்லி வருத்தப்பட்டாள். ஒன்றும் பதில் பேசாமல் ஏதோ பேருக்குச் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து பாயை விரித்துப் படுத்தான் அவன்.

米 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றியவுடன்தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவதென்று வைத்துக் கொண்டு தெய்வமும் அப்படிப் பட்ட நன்றியிலேயே திருப்தி யடைந்து விடுமானால், அப்புறம் சர்க்கார் அதிகாரி களுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

நாட்கள் சுவாரசியம் இல்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஒரு விவரமும் தெரியவில்லை. கோடை வெயிலின் கொடுமை காலை எட்டு மணிக்குமேல் மாலை ஆறு மணிவரை நகரத்தைக் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. நாள் தவறாமல் சத்தியமூர்த்தியின் தங்கை ஆண்டாள் தபால்காரனை எதிர்பார்ப்பதும் வாசலுக்கு வந்து காத்து நிற்பதும், ஏமாற்றத்தோடு திரும்பி வந்து, "அண்ணா தபால் ஒண்ணும் இல்லையாம்?' என்று தமையனிடம் சொல்லிவிட்டுப் போவதுமாக எதிர்பார்த்தது எதுவோ அது நிகழாத நாட்கள் ஒவ்வொன்றாக நீண்டு கொண்டிருந்தன. மதுரை நகரமும் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளும் ஒன்று சேர்ந்து மொத்தமாக எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாகச் சித்திரைத் திருவிழா வந்து கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும், 'சாமி என்னைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/159&oldid=595121" இலிருந்து மீள்விக்கப்பட்டது