பக்கம்:பொன் விலங்கு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - பொன் விலங்கு

அந்தச் சிறுவன் தன்னிடம் ஏதோ சொல்வதற்காகச் சிரமப்பட்டு வழி உண்டாக்கிக் கொண்டு அப்போது அங்கே வந்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

பெண்கள். இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரத நாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்த பின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து

கொடுத்து விட்டார் பரத முனிவர்.

அவ்வளவு பெரிய அவையில் சிறிதும் இடைவெளியின்றிக் கூடியிருந்த கூட்டத்தினர் மோகினியின் நாட்டியத்தில் முழுமையாக ஈடுபட்டு இலயித்திருந்த வேளையில் இடையே புகுந்து வழி உண்டாக்கிக் கொண்டு வருவதால் எத்தனை கோப தாபங்களைச் சந்திக்க நேருமோ அத்தனை கோப தாபங்களுக்கும் ஆளாகிய பின்பே அந்தச் சிறுவன் சத்தியமூர்த்திக்கு அருகே வந்திருந்தான். 'முடிந்ததும் பேசாமல் எழுந்து போயிடாதீங்க... அக்கா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க' என்று அந்தச் சிறுவன் தன் காதருகே முணுமுணுத்த போது, முதலில் அவன்மேல் அடக்க முடியாத கோபமும் பின்பு அவன் வந்திருக்கிற சூழ்நிலையை உணர்ந்து அவன்மேல் அநுதாபமும் உண்டாயின் சத்தியமூர்த்திக்கு. அமைதியான அவையில் மிகவும் அமைதியாயிருந்த முன் வரிசையில் தன்னிடம் அந்தச் சிறுவன் வந்து பேசிய பேச்சுக் குரலே கற்றிலுமிருந்த சிலர் தன் பக்கம் பார்த்து முகத்தைச் சுளிக்கக் காரணமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி புரிந்துகொண்டான். "நாட்டியம் முடிந்ததும் உன் அக்காவை அவசியம் பார்த்துவிட்டுப் போகிறேன். கூட்டத்தில் இப்படி அடிக்கடி நடுவே வந்து பேசாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/172&oldid=595150" இலிருந்து மீள்விக்கப்பட்டது