பக்கம்:பொன் விலங்கு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பொன் விலங்கு

பிடித்தால் நழுவிவிடுவார். நழுவிய பின்னும் பலர் அவரைப் பிடிக்க முயன்று பின்னால் ஒடித் துரத்திக் கொண்டிப்பார்கள். பிடித்தால் நழுவி ஓடிவிடுவதும், நழுவி ஓடிய பின்பும் பலரைக் காக்க வைத்தும் தம்மைப் பிடித்தால் காரியம் ஆகும் என்று வீண்பிரமை கொள்ளச் செய்வதும்தான் அவருடைய சாமர்த்தியங்கள். விலாங்கு மீனையாவது வலையைப் போட்டுப் பிடித்துத் தொலைக்கலாம். கண்ணாயிரம் யாருக்கும் பிடி கொடுக்கமாட்டார். ஆனால் அவரிடம் பலர் பிடி கொடுத்தும், பிடிபட்டும் தவித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் அந்த ஆளைப்பற்றின வாழ்க்கைச் சித்திரம்' என்று அளவெடுத்துச் சொன்னாற்போல் பலமுறை சொல்லியிருக்கிறான். மனிதர்களைப் பிடித்து முடிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன்தான். குமரப்பனும் தானும் சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கும் பல சந்தர்ப்பங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தன. அன்றிரவு அவன் கண்கள் சோர்ந்து உறங்கத் தொடங்கியபோது மூன்று மணிக்குமேல் இருக்கும். மறுநாள் காலையில் சில வெளியூர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினான். மதுரையைவிட்டு அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே இருந்தன. ஞாயிற்றுக் கிழமை மாலை நகரத்தின் பெரிய உணவு விடுதி ஒன்றில் குமரப்பனும் சத்தியமூர்த்தியின் நண்பர்களும் அவனுக்கு வழியனுப்பி உபசாரமாக ஒரு விருந்து கொடுத்தார்கள். நண்பர்கள் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவன் மனம் அவர்களையெல்லாம் பிரிந்து புதிய ஊருக்கு போகப் போவதை உணர்ந்து தவித்தது. தன்னுடைய இன்ப ஞாபகங்களும் துன்ப ஞாபகங்களும் வெற்றிகளும் தோல்விகளும் சகலமும் அத்தனை ஆண்டுகளாக அந்த நகரத்தோடு பிணைந்திருந்ததை நினைத்தான் அவன். இதைத்தான் தேசிய உணர்ச்சி என்று வேறு பெயரிட்டு அழைக்கிறார்களோ என்றும் அப்பொழுது அவன் எண்ணினான். நண்பர்கள் அதை ஒரு சிறு கூட்டமாகவே நடத்திவிட்டார்கள். 'சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும்போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலே உட்காருகிறேன் நான்" என்று நீர் குழம்பும் கண்களோடு பேச்சை முடித்துவிட்டான் ஒரு நெருங்கிய நண்பன். குமரப்பன் சிரிக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/184&oldid=595176" இலிருந்து மீள்விக்கப்பட்டது