பக்கம்:பொன் விலங்கு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பொன் விலங்கு

"அதோ அந்தக் கண்ணாடியில் நாம் நிற்பதைப் பாருங்கள்' என்று எதிரேயிருந்த மிகப் பெரிய நிலைக் கண்ணாடியைச் சுட்டிக் காண்பித்தாள் அவள். சத்தியமூர்த்தி நிமிர்ந்து எதிரே பார்த்தான்.

'இப்போது நாம் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்லட்டுமா?". அவள் குரல் அவனைக் கெஞ்சியது. 'சொல்லேன்' என்று அவன் பதில் கூறியதும் அவள் எதைச் சொன்னாளோ, அதைக் கேட்ட அவன் பேரின்பச் சிலிர்ப்படைந்தான்.

15

}; ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மனப் பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

'இப்போது நாமிருவரும் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று சொல்லட்டுமா?' என்று கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தியே அன்பின் நெகிழ்ச்சி மிகுதியினாலோ அல்லது வாய்க் குழறியோ சொல்லேன் என்று ஏக வசனமாக ஒருமையில் பதில் சொல்லியது மோகினிக்குப் பிடித்திருந்தது. அவன் அப்படித் தன்னை அழைக்க வேண்டும் என்றுதான் அவள் விரும்பினாள். உரிமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஒருமைக்கும் கீழானதொரு சொல் இருக்குமானால் அந்தச் சொல்லாலும் சத்தியமூர்த்தி தன்னை அழைக்க வேண்டும் என்றுதான் அவள் ஆசைப்பட்டாள். ஏங்கினாள். அன்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/210&oldid=595237" இலிருந்து மீள்விக்கப்பட்டது