பக்கம்:பொன் விலங்கு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பொன் விலங்கு

சமஸ்தானத்துக்குநவராத்திரியின்போதுசதிராடப்போனவள் அங்கே கவிஞர் ஒருவரைச் சந்தித்துக் காதல் கொண்டாள். ஆனால் அடுத்த நவராத்திரிக்கு அவள் அங்குபோய் விசாரித்தபோது பேரழகராகிய அந்தக் கவி அகால மரணமடைந்துவிட்டதை அறிந்து, இனி இந்தக் கால்கள் சலங்கை கட்டி ஆடப்போவதில்லை என்று விரதமெடுத்துக் கொண்டு திரும்பினவள் சாகின்றவரை தன் கைகளால் வெறும் வாத்தியங்களைத் தீண்டியது தவிர மனிதர்களைத் தன் அருகிலும் வரவிடாமல் வாழ்ந்து செத்துப் போனாளாம். சாகின்றவரை அந்தப் பெரிய பாட்டியின் ஞாபகத்தில் அவள் முதல் முதலாகச் சந்தித்த கவிஞரைத் தவிர வேறு எவரும் மதிப்புப் பெறவோ வணங்கப் பெறவோ இல்லையாம். அந்தப் பாட்டியை நான் பார்த்ததில்லை, ஆனால் அவளுடைய பரிசுத்தத்தையும் தூய்மையையும் பற்றி இந்த வீட்டில் எனக்கு நினைவு தெரிந்தபின் கதை கதையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் அந்தச் சனியன் பிடித்தவள் போனதைப் போலத்தான் உனக்கும் பயன் இல்லாமல் இந்த வீட்டுக்கும் பயனில்லாமல் போகப் போகிறாய். ஒருவேளை அவளே வந்து பிறந்து தொலைத்திருக்கிறாளோ என்னவோ?’ என்று கோபத்தில் அம்மா என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். அம்மா அப்படித் திட்டுவதைக் கேட்கும் போதெல்லாம் நான் பெருமைப்பட்டிருக்கிறேனே தவிர ஒரு சிறிதும் வருத்தப்பட்டதில்லை. செளகரியங்களோடு வாழ்கிறவர்கள் அதற்காகக்கர்வப்படலாம். ஆனால்தூய்மையாக வாழ்கிறவர்கள்தான் 'நாம் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.நான் செளகரியங்களுக்கு ஆசைப்படவில்லை, தூய்மையைக் காத்துக் கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். பலவிதமான சூழ்நிலைகளை உத்தேசித்து நான் வாழவே கூடாது. ஆனால் நீங்கள் காப்பாற்றி யிருக்கிறீர்கள்என்ற நல்ல ஞாபகத்தைப்போற்றுவதற்காவதுஇன்னும் சிறிது காலம் வாழவும் வேண்டும்."

"நிச்சயமாக வாழ வேண்டும்! நீங்கள்...இல்லை. இல்லை. நீ... வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீட்டுக்குள் வாயிற்படியேறி வந்தேன் நான். இந்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும்போது நான் மேலே ஏறிக் கொண்டிருக்கிறேனா அல்லது மேலே ஏறிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/212&oldid=595241" இலிருந்து மீள்விக்கப்பட்டது