பக்கம்:பொன் விலங்கு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ப்ொன் விலங்கு

வழியனுப்புகிறபோது வழக்கமாய்த் திரும்பத் திரும்பப் பேசுகிறவற்றையெல்லாம் அவர்களும் அவனிடம் பேசினார்கள்.

பயணத்துக்கான பரபரப்பில் மறுநாள் பொழுது விடிந்ததும் தெரியவில்லை; பொழுது சாய்ந்ததும் தெரியவில்லை. நல்ல சகுனம் ஆகிறதா என்று பார்த்துக்கொண்டு படியிறங்கு' என்று கூறிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தயாராகத் தெருவில் கொணர்ந்து நிறுத்தியிருந்த குதிரை வண்டியை நோக்கி நடந்தான் சத்தியமூர்த்தி. வண்டியில் பயணத்துக்கான சாமான்களையெல்லாம் ஏற்றி வைத்தாயிற்று. அப்பாவும் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். அம்மாவும், தங்கைகளும் வாயிற்படியில் வந்து நின்றுகொண்டு அவனுக்கு விடை கொடுத்தார்கள். குதிரைவண்டி தெருத் திரும்புகிறவரை மனம் ஏதோ பெரிய சுமையைத் தாங்க முடியாமல் கனப்பது போலிருந்தது. அதற்குள் தந்தை ஏதோ சொல்லத் தொடங்கினார். இரயில் நிலையம் வருகிறவரை சத்தியமூர்த்தி அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். குமரப்பனும் வேறு சில நண்பர்களும் இரயில் நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். இரயில் புறப்படுகிறவரை நண்பர்கள் ஒவ்வொரு வரோடும் பேசுவதற்குத்தான் சரியாயிருந்து. சத்தியமூர்த்தியின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டதனால் தந்தை இரயில் நிலையத்திற்குள் வந்தபின் அவனோடு அதிகம் பேசவில்லை. இரயில் நகர்ந்ததும், போய்ச் சேர்ந்த விவரத்துக்கு கடிதம் எழுது என்று அவர் கூறியதற்கு ஆகட்டும் என்று தலையசைத்தான் அவன். பிளாட்டாரத்தை விட்டு இரயில் விரைந்து செல்லத் தொடங்கியபோது தந்தை தள்ர்ந்த நடையோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பதை அவன் ஓடும் இரயிலிலிருந்தே பார்த்தான்.

நல்ல வேளையாக அன்று இரவு அவன் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் தங்கவேண்டிய அவசியம் நேரவில்லை. மேலே மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கடைசி பஸ்ஸில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. மறுநாள் கல்லூரி திறக்கப் போகிற நாளாகையால் பஸ்ஸில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனைப் போல் புதிதாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை ஒப்புக்கொள்வதற்குச் செல்லும் இரண்டொரு விரிவுரையாளர்களும் ஏற்கெனவே அங்கு வேலை பார்க்கிற விரிவுரையாளர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/216&oldid=595249" இலிருந்து மீள்விக்கப்பட்டது