பக்கம்:பொன் விலங்கு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 229

ஹெட்கிளார்க்கும் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை, இங்கே வந்து விட்டேன்....."

சில விநாடிகள் ஒன்றும் பேசாமல் மன அழுத்தத்தோடு உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த பாரதி பின்பு நிதானமாக அவனைக் கேட்கலானாள்.

'பிரின்ஸிபாலையும், ஹெட்கிளார்க்கையும்தான் பிடிக்க வில்லையா? என்னையும் சேர்த்துப் பிடிக்காமல் போய்விட்டதா?"

"அது சரி...? உங்கள் தந்தை எஸ்டேட்டிலிருந்து திரும்பி விட்டாரா இல்லையா?' என்று அவள் கேள்விக்குப் பதில் கூறாததோடு சிரித்துக் கொண்டே அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு கேள்வியையும் அவளிடம் கேட்டான் சத்தியமூர்த்தி.

"அப்பா திரும்பிவிட்டார். காலையில் அவர் திரும்பியதும் நீங்கள் வந்திருப்பதையும்கூடச் சொல்லி விட்டேன். எதற்காக இப்படிப் பேச்சை மாற்றுகிறீர்கள்? காலையில் எழுந்ததும் எழுந்திராததுமாகச் சமையற்காரரைக் கூட அருகில் நெருங்க விடாமல் நானே என் கையால் காப்பி போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன். நீங்களோ அந்தக் காப்பியைப் பிளாஸ்க்குடன் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். நேற்றானால் அந்த அகாலத்தில் இருட்டென்றும் குளிரென்றும் பாராமல் நான் உங்களை அழைத்துக் கொண்டுபோகப் பஸ் நிலையத்துக்கு வந்தேன். அப்போதும் நீங்கள் என்னிடம் சுமுகமாக இல்லை. பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களை என்னதான் சொல்வது'.என்று சீறுகிறாற் போன்ற வார்த்தைகளால் அவனைச் சாடிக் கொண்டே பிளாஸ்க்கைத் திறந்து அதன் மூடிக்குள்ளே அடங்கியிருந்த சிறிய பிளாஸ்டிக் கப்"பில் ஆவி பறக்கும் காப்பியை ஊற்றி நீட்டினாள் அவள். அதை மறுக்காமல் வாங்கிப் பருகிய சத்தியமூர்த்தி, 'உங்களுடைய கோபத்தைப் போலவே காப்பியும் சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவம்...! பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத கல்மனம் படைத்தவனைத் தேடி நீங்கள் இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/231&oldid=595283" இலிருந்து மீள்விக்கப்பட்டது