பக்கம்:பொன் விலங்கு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பொன் விலங்கு

வகுப்பறையில் சத்தியமூர்த்தி அந்தச் சொற்பொழிவைச் செய்த நேரத்தில் அவனுடைய சொற்கள். அவனுட்ைய உணர்ச்சி, முக பாவங்களாலும், அபிநயங்களாலும் அவன் கருத்துக்களைப் பேசிய விதம், எல்லாம் அழகுமயமாயிருந்தன. பிறரை ஏங்கச் செய்கிற வசீகரமான சொல்லுக்கும் நினைப்புக்கும் சொந்தக்காரன் யாரோ அவன் அதிசயமானவனாக இருக்க வேண்டும். அந்த விரிவுரையைக் கேட்ட மாணவர்கள் அத்தனை பேருக்கும் அவன் அப்படி ஓர் அதிசயமாகத்தான் தோன்றினான். ஏ மைண்ட் அட் பீஸ் வித் ஆல்பிலோ.ஏ.ஹார்ட்ஹஸ் லவ் இஸ் இன்னொஸென்ட் என்று அந்தக் கவிதையின் கடைசி வரிகளையும் அவன் கூறி விவரித்து முடித்தபோது வகுப்பு முடியவேண்டிய நேரத்துக்கு மேலும் கால்மணி நேரம் ஆகியிருந்தது. மாணவ மாணவிகள் எழுதி வைத்த சித்திரங்களைப் போல் அசையாமல் கட்டுண்டு கிடந்தார்கள். அந்தப் பாடலின் நடுவே, ஹெள பியூர்? (எவ்வளவு பரிசுத்தம்?) ஹெள டியர்? (எவ்வளவு கனிவு) என்ற தொடர்களை ஒலித்தபோதும் மோகினி பரிபூரணமாக அவன் மனக்கண்களில் தோன்றி நின்றாள். வகுப்பை முடித்துவிட்டு, அவன் மாணவ மாணவிகள் பக்கம் திரும்பி, மெளனமாக நிமிர்ந்து பார்த்தபோது, அத்தனை பேருடைய கண்களும், முகங்களும் ஆச்சரியத்தினாலும் வியப்பினாலும் மலர்ந்திருப்பதைக் கண்டான். அவனிடமிருந்து புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொள்ள வந்த பாரதி, "இந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் தங்கள் வாழ்நாளில் இதற்கு முன் இப்படி ஒர் இலக்கிய நயமிக்க விரிவுரையைக் கேட்டதில்லை சார்” என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சொல்லிவிட்டுப் போனாள். வகுப்பறையை விட்டு வெளியேறும்போது சத்தியமூர்த்தியைப் பின்பற்றியும் சூழ்ந்துகொண்டும் மாணவர்கள் கூட்டம் மொய்த்தது. தங்கள் மனத்துக்குப் பிடித்த ஒரு நல்ல விரிவுரையாளனைக் கண்டு பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் முகத்திலும் மனத்திலும் ஆர்வம் பொங்கச் சூழ்ந்தார்கள் இளைஞர்கள். அவர்களுடைய அன்பு நிறைந்த பாராட்டுதல்களிலிருந்தும் ஆர்வம் நிறைந்த விசாரிப்பு களிலிருந்தும் சிறிது சிறிதாகத் தன்னை விலக்கி விடுபட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/258&oldid=595341" இலிருந்து மீள்விக்கப்பட்டது