பக்கம்:பொன் விலங்கு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 265

மாணவர்களை இன்னும் சிரத்தையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். அந்த காரியத்தைத் தைரியமாக உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு" என்றார் அவர்.

நீண்ட நேரத் தயக்கத்துக்குப்பின் சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் சொல்லியே தீர வேண்டியதாயிற்று. 'நீங்கள் இந்தக் காரியத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அதே சமயத்தில் இதை ஏற்றுக்கொள்ளவும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது சார் வயதும், அநுபவமும் மிகுந்த ஆசிரியர்கள் பலர் இந்தக் கல்லூரியில் இருக்கிறார்கள். நான்வயதில் இளையவன். புதிதாக வந்திருப்பவன், உங்கள் எண்ணத்தை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனாலும் போகலாமோ என்றுதான் தயங்குகிறேன் சார்......'

இப்படி அவன் சாதாரணமாகக் கூறிய பதிலை அவர் தம்மைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டார். முதன் முதலாக அவன் இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தபோது அவனுடைய வயது, இளமை, அநுபவம் ஆகியவற்றைப் பற்றித் தான் அதிகமாக விவாதித்துவிட்டதை இப்போது அவன் இப்படிச் சொல்லிக் காட்டுவதாகப் புரிந்துகொண்ட பூபதி, "மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் எதற்காகவோ என்னிடம் இதைச் சொல்லிக் காண்பிக்கிறீர்கள் என்று படுகிறது. அப்படியானால் என்னை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கவேண்டியிருக்கும்' என்றார். சத்தியமூர்த்தி மெளனமாக இருந்தான். பூபதி அவ்வளவுடன் அவனை விட்டுவிடவில்லை.

'இதோ என்னைப் பாருங்கள் சத்தியமூர்த்தி! நான் உங்களுக்குச் சம்மதமா, இல்லையா என்று கேட்டு இதுவரை தயங்கிக் கொண்டிருப்பதை இனிமேல் செய்யப் போவதில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் நீங்கள் இந்தக் கல்லூரியின் விடுதிக்கு உதவி வார்டனாக நியமிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சர்க்குலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/267&oldid=595361" இலிருந்து மீள்விக்கப்பட்டது