பக்கம்:பொன் விலங்கு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 267

'பொய்தவழும் உலகநடை என்னென்பேன்? என்னென்பேன்? என்று இராமலிங்க சுவாமிகள் கதறியிருப்பதை நினைத்துக் கொண்டான் அவன். வகை வகையான எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் உடைய மனிதர்களை இரசிக்கத் தெரிய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப் பானே-அது இப்போது ஞாபகம் வந்தது. செய்தி அதற்குள் எப்படியோ கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. கல்லூரி முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் 'உங்களை உதவி வார்டனாக நியமிக்கப்போவதாகப் பேசிக் கொள்கிறார்களே?' என்று பாடனி விரிவுரையாளர் சுந்தரேசன் நடுவழியில் கேட்டபோது சத்தியமூர்த்தி மெளனமாகப் புன்னகை செய்தான். ஆமாம் என்றும் ஒப்புக்கொள்ளவில்லை; இல்லை என்றும் மறுக்கவில்லை. பலர் பணிபுரியும் பொது நிறுவனங்களில் தனி ஒருவனுடைய வளர்ச்சியும், தளர்ச்சியும், ஒவ்வொரு விநாடியும் அந்தப் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்குமென்று அவனுக்குத் தெரியும். வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படவும், தளர்ச்சியைக் கண்டு பெருமைப்படவும் செய்வார்கள் என்பதும் தெரியும்.

米 - வாழைக்காய்க்குலை முற்றிய வுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக். களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப்போல் அந்த

வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலுமே அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்த்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/269&oldid=595365" இலிருந்து மீள்விக்கப்பட்டது