பக்கம்:பொன் விலங்கு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பொன் விலங்கு

கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்கவேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக் காட்டி, "இது மிகவும் உயர்ந்த ரகத்துக் கேமிராகுமரப்பன் அட்ஜஸ்ட்மென்ட் சரியாக இருந்தால் பிரமாதமாயிருக்கும்' என்றார். குமரப்பன் அவரைச் சும்மா விடவில்லை. х

"ஆமாம் சார் நன்றாகச் சொன்னீர்கள். அட்ஜஸ்ட்மென்ட் சரியாயிருந்தால் எதுவுமே பிரமாதமாகத்தான் இருக்கும்" என்று அந்த ஆள் வாய் ஓயாமல் கண்ணாயிரத்தைப் புகழ்வதையும் சேர்த்துத் துணிவாகவும், குத்தலாகவும் சொல்லிக் காண்பித்தான் குமரப்பன். அதற்கப்புறம் மோகினியின் வீடுவந்து சேர்கிறவரை அந்த உதவி ஆசிரியர் வாயைத் திறக்கவேயில்லை. மோகினியின் தாய் முத்தழகம்மாள் வீட்டு வாசலிலேயே அவர்களை எதிர்கொண்டு வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் குத்துவிளக்கின் உதவியாசிரியரை முதலில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "இவர் அந்தப் பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைகிறவர். நிரம்பவும் வேடிக்கையாகப் பேசுவார். நல்ல கலை ரசிகர்' என்று அவனைப்பற்றியும் கூறினார். உடனே குமரப்பன் நடுவில் குறுக்கிட்டு, 'தயவுசெய்து அப்படிச் சொல்லாதீர்கள் சார்? நீங்களெல்லாம் கலைரசிகர் இருக்கிற உலகத்தில் என்னைப் போன்றவர்களும் கலைரசிகர்களாக இருப்பது முடியாத காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஏதோ மனிதர்களை மட்டும் ரசித்துக்கொண்டிருக்கிற பாமரன் சார்' என்று அதிக விநயமாக ஆரம்பித்து அவரை மடக்கிப் பேசினான். ஒவ்வொரு முறையும் வாயைத் திறந்து பேசும்போது பேச்சில் அவனிடம் வகையாகப் பிடிபட்டுக்கொண்டு விழித்தார் கண்ணாயிரம். அவருக்கு அவன் ஒரு பிரச்சினையாயிருந்தான். நளின கலைகளின் இருப்பிடமான அந்தத் தெருவிலும் அந்த வீட்டுக்குள்ளும் நுழையும்போது குமரப்பன் தன் மனத்தில் ஏதேதோ சிந்தித்தான். மனித நினைவுகளைத் தெய்வீகத்தோடு கொண்டுபோய் இணைப்பதற்காகத் தோன்றிய உயர்ந்த கலைகள் எல்லாம் பத்திரிகைப் புகழுக்கும் பணத்துக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/282&oldid=595395" இலிருந்து மீள்விக்கப்பட்டது