பக்கம்:பொன் விலங்கு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பொன் விலங்கு

கொண்டிருக்கும்போது நான் அருகே வந்து அழைத்ததை நீங்கள் சிறிதும் விரும்பாததுபோல் கடுமையாக நடந்து கொண்டீர்கள். அன்று அப்படி உங்கள் சுவாரஸ்யமான பேச்சின் நடுவே குறுக்கிட்டுத் தொல்லை கொடுத்து விட்டதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்னைப் போன்றவர்கள் அன்பின் மிகுதியினாலேயே சில சமயங்களில் தவறு செய்து விடுகிறோம்" என்று அவள் தளர்ந்த சொற்களால் நிறுத்தி நிறுத்திக் கூறியபோது சத்தியமூர்த்திக்கு அவளிடம் என்ன மறுமொழி கூறுவதென்றே தெரியவில்லை. அந்த நிகழ்ச்சி அவள் மனத்தை இவ்வளவு ஆழமாகப் புண்படுத்தி வைத்திருக்குமென்று அவன் எதிர் பார்க்காததனால் முதலில் சிறிது மருண்டான். மறுபடியும் அவன் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அந்தக் கவர்ச்சி வாய்ந்த கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. அவளே மறுபடியும் பேசலானாள்: -

'இப்போதுகூட நான் உங்களைத் தேடித்தான் இங்கே வந்திருக்கிறேனோ என்றெண்ணிக் கொண்டு என்மேல் நீங்கள் கோபப்படலாம். இன்று அப்பாவின் விருந்தாளியாக ஐரிஷ்காரத் தொழிலதிபர்கள் இருவர் வீட்டில் வந்து தங்குகிறார்கள். வீட்டை அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டு போகலாம் என்றுதான் இங்கே வந்தேன்' என்றுகூறி, ராயல் பேக்கரிக்கு அருகிலிருந்த பிளவர்ஸ் கார்னர் என்னும் கடையைச் சுட்டிக் காண்பித்தாள் பாரதி.

அந்தக் கடையில் மேஜைகளிலும், அலங்காரக் கூடங்களிலும் கண்ணாடிக் குடுவைகளில் சொருகி அழகுபடுத்தும் நவநாகரிக மலர்கள் மட்டுமே வியாபாரம், விதம் விதமான நிறங்களில் வகை வகையான உருவங்களில் வாசனையில்லாதனவாய்ப் பார்க்க மட்டும் அழகுடைய பூக்களை அடுக்கி வைத்துக்கொண்டு விற்று முதலாக்க மல்லிகைப் பந்தலில் முடியும். அந்த அலங்காரப் பூக்கள் விற்கும் கடை, காலை ஏழுமணியிலிருந்து பத்துமணிவரை மட்டும்தான்திறந்திருக்கும். அந்த மூன்று மணிநேரத்துக்குள் அங்கே ஐம்பதிலிருந்து நூறு ரூபாய்வரை வியாபாரம் ஆகிவிடுமென்று சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/346&oldid=595534" இலிருந்து மீள்விக்கப்பட்டது