பக்கம்:பொன் விலங்கு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பொன் விலங்கு

ஊற்றி நான் கொண்டு வந்திருக்கிற மலர்களில் சிலவற்றால் அலங்கரிக்க வேண்டும் போல ஆசையாயிருக்கு' என்று உற்சாகமாகச் சிரித்துக்கொண்டே கூறியபடி அவள் அறைக்குள் நுழையவும் சத்தியமூர்த்தி கீழே குவித்துவைத்திருந்த கிழிசல் கடிதத் துணுக்குகள் பால்கணி வழியாக வீசிய காற்றில் மேலே எழும்பிப் பறக்கவும் சரியாயிருந்தது. பூக்களை ஒருகையில் மாற்றிக் கொண்டு அறை முழுவதும் குப்பையாகச் சிதறிவிட்ட அந்தக் காகிதத் துணுக்குகளைப் பொறுக்கிச் சுத்தம்செய்ய முந்திய பாரதி நாலைந்து துணுக்குகளைப் பொறுக்கியதுமே திகைத்துப் போய் நின்றுவிட்டாள். தன்னுடைய ஆசையின் சிதறல்களைத் தானே பொறுக்கி வெளியில் எறிய நேருவது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம்! அந்தத் துர்ப்பாக்கிய நிலையில்தான் பாரதியும் அப்போது இருந்தாள். சத்தியமூர்த்தியோ ஒன்றும் செய்யத் தோன்றாத நிலையில் அவள் முகத்தை அப்போது ஏறிட்டுப் பார்ப்பதற்கே கூசிப் போயிருந்தான். -

29

தீரர்கள் ஒருபோதும் தங்களுக்குப் பக்கத்தில் நிற்கிற ஆயிரம் நண்பர்களால் மட்டும் திருப்திப்பட்டு விடுவதில்லை. எங்கோ இருக்கிற யாரோ ஒர் எதிரியை அழிக்கவே அவர்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

sk ஒரு மென்மையான மலரை வாடிவிடாமல் பத்திரமாகப் பொதிந்து வைக்க வேண்டுமென்ற முயற்சியிலேயே கைதவறிக் கசக்கி எறிந்து விட்டாற் போன்றிருந்தது அந்தச் சூழ்நிலை. தரையிலிருந்து பொறுக்கிய கடிதத் துணுக்குகளைக் கையில் வைத்துக்கொண்டு அவள் கண்கலங்கி நிற்பதை உணர்ந்தபோது அவன் அடைந்த வேதனை சொற்களால் அளவிட்டு உரைக்க முடியாததாக இருந்தது. ஒருவரை வெறுத்தாலும் அந்த வெறுப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/354&oldid=595552" இலிருந்து மீள்விக்கப்பட்டது