பக்கம்:பொன் விலங்கு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

$:

சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாயிருக்கிறாள். அப்படிச் சமயங்களில் அவள் அதிசய மாயிருக்கிறாள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதையுமே அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

>k

கல்லூரி யூனியன் தேர்தலுக்கு மாணவர்கள் அபேட்சை மனுவைக் கொடுக்கும் இறுதி நாளான மறுநாள் மாலை மகேசுவரி தங்கரத்தினமும் மற்ற மாணவிகளும் எப்படியோ பாரதியைச் சம்மதிக்கச் செய்து அவள் கையாலேயே சத்தியமூர்த்தியிடம் அபேட்சை மனுவைக் கொண்டு வந்த போது பாரதியின் முகத்தில் சிறிதுகூட மகிழ்ச்சியே இல்லை. முன்பின் பழக்கமில்லாத மூன்றாம் மனிதனைத் தேடிக் கொண்டு வந்து அபேட்சை மனுவைக் கொடுப்பதுபோல் அவள் அவனிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவள் சற்றே அலட்சியமாக வந்து போனது போலவுமிருந்தது. சத்தியமூர்த்தியும் அவளிடம் அப்படியே நடந்து கொண்டான். தனக்கு அவள் பிரியமாக எழுதியிருந்த கடிதங்களை அவள் கண் முன்பே சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்திருந்தது அவளுடைய மனத்தை அவ்வளவு ஆழமாக வேதனைப்படுத்தி ஆத்திரத்துக் குள்ளாகியிருக்கிறதென்று சத்தியமூர்த்தியால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படி அவள் மாறியிருந்தாலும், அவளைப் பொறுத்தவரை அந்த மாற்றத்தையே சத்தியமூர்த்தியும் நீடிக்க விரும்பினான். -

தன்னைப் பார்த்துப் பேசிவிட்டு போன பின்பு மகேசுவரி தங்கரத்தினம் பாரதியைச்சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பின்போது அவள் பாரதியைக் கேட்டிருக்கும் முதல் கேள்வி, "உனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/363&oldid=595572" இலிருந்து மீள்விக்கப்பட்டது