பக்கம்:பொன் விலங்கு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö72 பொன் விலங்கு

சிமென்ட்டுக்கும், செங்கல்லுக்கும் அலையவும்தான் சரியாயிருக்கிறது. மாடியிலும், முன் பக்கத்துப் போர்ஷனி'லும் மராமத்து வேலை நடப்பதால் ஒண்டுக் குடித்தனம் இருந்த இரண்டு பேரையும் காலி செய்து அனுப்பியாயிற்று. அதனால் வாடகை வருமானமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குக் கிடையாது. கட்டிடம் முடிந்து நிறைவேறிய பின் மறுபடி குடித்தனக்காரர்களை வாடகைக்கு வைக்கலாமா அல்லது வாசல் பக்கமாக-வீட்டுக்குள் வராமலே ஏறி இறங்க வசதியாக மாடிப்படி கட்டிக்கொடுத்து ஏதாவது ஆபீசுக்கு விட்டு விடலாமா என்று யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறேன். நீர்மட்டும் நான்கொடுக்கிற"பிளானை அநுசரித்துக் கட்டுவதாயிருந்தால் நம் மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸிஸ் காரியாலயத்தையே உம்முடைய மாடிக்கு மாற்றி விடலாம் என்று கண்ணாயிரம் அடிக்கடிசொல்லிக்கொண்டிருக்கிறார். அவரால் நல்ல வாடகை கொடுக்கவும் முடியும். தாராளமாகச் செலவழிக்கிற கைராசிக்காரர். நமக்கும் படிப்படியாகக் கடன் கழிந்து போகும்.'

கடிதத்தில் இந்த இடத்தைப் படித்தபோது அப்பா கண்ணாயிரத்தை நம்பி மோசம் போய்விடப் போகிறாரே என்று வருத்தமாக இருந்தது. அதே சமயத்தில் அப்பாவுக்கும் தனக்குமிடையில் ஒன்றைப்பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலும் ஒரு தலைமுறைக் கால அளவு வித்தியாசம் இருப்பதையும் அவனால் உணர முடிந்தது. இன்று இந்த நாட்டில் மேலெழுந்து நிற்கும் பல சமூகப் பிரச்னைகளுக்குக் காரணமே ஒரு தலைமுறைக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறை யினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம்தான். ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாயிருக்கின்றன. 'மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், கண்ணாயிரமும் அப்பாவின் கண்களுக்கும், சிந்தனைக்கும் பெரிய மனிதர்களாக்த் தோன்றுகிறார்கள். நானும் குமரப்பனுமோ இதே ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் எல்லா விதத்திலும் குறைபாடுடைய சமுதாயக் கள்ளர்களாக நினைக்கிறோம் என்று எண்ணியபடியே தந்தையின் கடிதத்தின் மீதமுள்ள பகுதியைப் படிக்கலானான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/374&oldid=595596" இலிருந்து மீள்விக்கப்பட்டது