பக்கம்:பொன் விலங்கு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 387

நேரம் அப்படியே திகைக்க வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தத் திகைப்புக்குப் பின்பும் உண்மை நட்புத்தான் சத்தியமூர்த்தியின் மனத்தில் நின்றதே ஒழிய நண்பனைப் பற்றிச்சிறிதளவு வெறுப்பும்

நிற்கவில்லை.

33

இந்தக் காதல் என்கிற உணர்ச்சி இருக்கிறதே, அதை ஓர் ஆச்சரியமாகத் தான் கருதவேண்டியிருக்கிறது. ஏனென் றால் அது கதையில் வரும்போது உண்மையைப்போல் தோன்றி மயக்கு கிறது. உண்மையில் நடக்கும் போதோ கதையைப் போல் தோன்றி மருட்டுகிறது. 米

சத்தியமூர்த்தியின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த குமரப்பன்கூறலானான்:"நான்தான் இந்தத்தவற்றைச் செய்தேன் என்று சொல்லி விளக்குவதற்கு அவசியமில்லாமலே, இதை என்னால் மறைத்திருக்க முடியுமானாலும் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லையடா சத்தியம்! நீ கல்லூரிக்குச் சென்ற பிறகு இங்கு எனக்குப் பொழுது போகவில்லை. படிப்பதற்கு ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடினேன். வெளியில் நல்ல புத்தகமாக எதுவுமில்லை. நமக்கில்லாத உரிமையா என்ற தைரியத்தில் உன் பெட்டியைத் திறந்து புத்தகங்களைத் தேடிய போது ஒரு மூலையில் இந்தக் கடிதம் மடிக்கப்பட்டுக் கிடந்தது. ஏதோ ஒருவிதமான அசட்டுத் தைரியத்தில் அடக்கமுடியாத ஆவலோடு இதைப் பிரித்துப் படித்துவிட்டேன். இதைக் கையில் எடுத்த வரை என்னை நீ மன்னிக்கலாம். கையில் எடுத்த பின்பும் பிரித்துப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னளவில் தடுத்துக் கொண்டிருக்க முடியும். அப்படி நான் என்னைத் தடுத்துக் கொள்ள முடியாமற் போனதற்காகத்தான் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கிறது."-மனத் தயக்கத்தோடு இப்படிக் கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியிடம் நீட்டிய கடிதம் அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்தபின் மோகினி அவனுக்கு எழுதியது. தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/389&oldid=595628" இலிருந்து மீள்விக்கப்பட்டது