பக்கம்:பொன் விலங்கு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 389

வேளையில் என்னென்ன உணர்வுகளை அவன் அடைந்திருக்க முடியும் என்று அநுமானம் செய்கிற ஆவலோடு இப்போது தானே அதை ஒரு முறை படிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.

என்னைக்காப்பாற்றி ஆட்கொண்டதெய்வத்தின்திருவடிகளில் அடியாள் மோகினி அநேக வணக்கங்கள் என்று தொடங்கிய அந்தக் கடிதம் புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணம் ஆகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணமானவள் என்ற வாக்கியத்தைப் படிக்கும்போதும், 'உங்களுடைய வாத்தியம் - உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம்-வாசிக்கநீங்கள் இல்லாமல்துசிபடிந்துபோய் மூலையில் கிடக்கிறது என்ற இறுதி வாக்கியத்தைப் படிக்கும்போதும் அவனை மெய் சிலிர்க்கச் செய்தது. இதே வாக்கியங்களைப் படிக்கும்போது குமரப்பன் என்னென் உணர்ச்சிகளை அடைந்திருப்பான் என்றெண்ணிப் பார்க்க முயன்றான் சத்தியமூர்த்தி.

கடிதத்தைப் பிரித்துப் பிடித்துக் கொண்டிருந்த கைவிரலில் பழைய ஞாபகங்களின் சுகத்துக்கு ஒரு சாட்சியாக அந்த நீலக்கல் மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. பூக்களும், ஊதுவத்தியும் மணந்து கொண்டிருந்த ஒரு சிறிய வீட்டின் கூடத்தில் மனோரம்மியமான சாயங்கால வேளை ஒன்றில் அழகிய விரல்கள் தன்னைக் கைப்பற்றி அந்த மோதிரத்தை அணிவித்த நாள் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மோகினியின் ஞாபகத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது. அப்போது சத்தியமூர்த்தி இருந்த நிலையைப் பார்த்து அவன் தன்னிடம் நிறையப் பேச விரும்புகிறான் என்று குமரப்பன் குறிப்பாகப் புரிந்துகொண்டு அவனை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றான். கரையில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிய வண்ணமிருக்கவே, நண்பனோடு மனம்விட்டு உரையாடுவதற்கேற்ற தனிமைக்காக ஒரு படகுக்கு வாடகை பேசி முன்பணம் கொடுத்து நண்பனையும் அமரச் செய்தபின் தானே துடுப்புகளை வலித்து ஏரியின் நடுப்பகுதிக்குச் செலுத்திக்கொண்டு போனான் குமரப்பன். வெள்ளையும் சிவப்புமாக நீர்ப்பூக்கள் மலர்ந்த ஏரிநீர்ப் பரப்பினிடையே மோகினியைப் பற்றிய நினைவுகள் பூக்கும் மனநிலையோடு பிரமை பிடித்தாற்போல் படகில் அமர்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. நண்பன் குமரப்பனிடம் தான் எதைப் பேசவேண்டுமென்று நினைத்தானோ அதற்குப் பொருத்தமான ஆரம்பத்தைத் தேடிச் சிந்திப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/391&oldid=595631" இலிருந்து மீள்விக்கப்பட்டது