பக்கம்:பொன் விலங்கு.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 பொன் விலங்கு

'எனக்குப் பத்மபூரீ விருது கிடைத்ததென்ற தகவல் தெரிந்ததோ இல்லையோ, விடிந்ததும், விடியாததுமாக பிரின்ஸிபால் யானைத் துதிக்கை அளவுக்கு பெரிய ரோஜாப்பூ மாலையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். என் மகளும் நானும் மல்லிகைப் பந்தலை விட்டுக் காரில் புறப்படுவதற்குள் அநேகமாக எல்லா நண்பர்களும், தெரிந்தவர்களும் தேடிவந்து மகிழ்ச்சியை தெரிவித்துப் பாராட்டி விட்டுப் போய்விட்டார்கள். முதலில் என் மகள் பாரதி மதுரை வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டு மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிவிடப் போவதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்போது என்னவோ திடீரென்று நானும் டில்லிக்கு வருகிறேன் அப்பா என்கிறாள். அவளுக்கும் ஏர் டிக்கட் வாங்கியாயிற்று. நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம்..." என்று தொடங்கிய பூபதி எதையோ நினைத்துத் தயங்கினார். பின்னால் திரும்பி மகள் பாரதியைத் தேநீர் எடுத்துக்கொண்டு வரச்சொல்லி சாமர்த்தியமாக அவளை உள்ளே அனுப்பிவிட்டுக் குரலைத் தணித்துக்கொண்டு சத்தியமூர்த்தியிடம் மெல்லக் கூறலானார் பூபதி.

"நான் டில்லியிலிருந்து திரும்புவதற்கும் கல்லூரி நவராத்திரி விடுமுறை முடிந்து திறப்பதற்கும் சரியாயிருக்கும். கல்லூரி திறந்த ஒரு வாரத்திற்குள் என்னுடைய பிறந்த தினம் வருகிறது. அதையொட்டி'ஸ்தாபகர் தின விழாவோ என்னவோ கொண்டாடப் போவதாகப் பிரின்ஸ்பால் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு இதெல்லாம் பிடிப்பதே இல்லை...என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? ஆனால் பிரின்ஸிபாலும் மாணவர்களும் ஆசைப்படுவதைக் கெடுக்க விரும்பவில்லை. அந்த விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்கிற பொறுப்பு உங்களுடைய தாக...இருக்கணும். நம்முடைய மந்திரியைப் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன். மந்திரிக்குக் கொடுக்கிறதுக்கு ஒரு வரவேற்பு இதழ் நீங்க எழுதணும். அதிலே இந்த விஷயத்தைக் கொஞ்சம் அழுத்தி வற்புறுத்தணும்..." என்று சொல்லிக்கொண்டே காதருகில் வந்து வரவேற்பு இதழில் வற்புறுத்த வேண்டிய விஷயத்தை இரகசியமாக அவனிடம் கூறினார் பூபதி. வரவேற்பு இதழில் எந்த விதமாகவும் தொடர்புபடுத்திச் சொல்ல முடியாத சொந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/448&oldid=595694" இலிருந்து மீள்விக்கப்பட்டது