பக்கம்:பொன் விலங்கு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 - பொன் விலங்கு

காதலர் யாரோ-அவரால்தான் நான் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டு இப்போது உயிர் வாழ்கிறேன் இல்லையா?" -

அவளுடைய அந்த அன்புப் புகழ்ச்சியில் அவன் மெய் மறந்திருந்தபோது வார்டு அறையின் முன்புறம் ஏதோ கார் வந்து நிற்கிற ஓசை கேட்டது. அந்த ஓசையைக் கேட்டதுமே மோகினியின் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் மறைந்து பயம்வந்து நிறைந்தது. புலியின் வருகையால் நடுங்கும் மான் குட்டியைப்போல் பதறினாள் அவள். "ஜமீன்தாருடைய காராகத்தான் இருக்கும்" என்று அவள் பரபரப்பாகக் கூறவும் சத்தியமூர்த்தி எழுந்து ஸ்கிரீன் மறைவுக்கு மேல் தலைநிமிர்ந்து வெளியே எட்டிப் பார்க்கவும் சரியாக இருந்தது.

ஜமீன்தார் மட்டுமல்லாமல், அவரோடு மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி, அவர் மகள் பாரதி, கண்ணாயிரம் எல்லாரும் ஒரு பெரிய காரில் வந்து இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். பிரமுகர்பூபதிக்கு பத்மபூரீவிருது கிடைத்ததற்குப் பாராட்டுத் தெரிவிப்பதற்காக அவருடைய படத்தை அட்டையில் தாங்கி வெளிவந்திருக்கும் புதிய குத்துவிளக்கு இதழை நடந்தவாறு புரட்டிக்கொண்டே கடைசியாக வந்து கொண்டிருந்தாள் பாரதி. கண்ணாயிரமும், பூபதியும், ஜமீன்தாரும் சிரித்தபடியே பேசிக் கொண்டே வார்டுக்குள் நுழைந்தனர். முதலில் 'இதென்ன வேண்டாத இடத்தில் வேண்டாத சந்திப்பாக வந்து வாய்க்கிறதே என்று மனம் குழம்பிய சத்தியமூர்த்தி பின்பு சிறிதும் தயங்காமல் மிகமிக அருகே வந்துவிட்ட பூபதியை நோக்கி, "ஹலோ சார், குட்மார்னிங்.." என்று வரவேற்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த பூபதி,

"நீங்கள் எங்கே...இப்படி இங்கே...?" என்று எதிர்பாராமல் அவனைச் சந்தித்துவிட்ட திகைப்போடு வினவினார். அவனுடைய குரலை அடையாளம் கண்டு பத்திரிகை படித்தபடி நடந்துவந்த பாரதியும் அதே திகைப்போடு எதிரே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மோகினியைத் தனக்குத் தெரியும் என்றும் அவள் கார் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து பார்த்துவிட்டுப் போக வந்ததாகவும், பூபதியிடம் சிறிதும் தயங்காமல், தெளிவாகவும் பொதுவாகவும் அவன் மறுமொழி கூறினான். அவர் அதை எப்படி வரவேற்றார், எவ்வளவு நம்பினார் என்பதைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/458&oldid=595705" இலிருந்து மீள்விக்கப்பட்டது